காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வும் சிசுதிரிய புலமைப்பரிசில் நிகழ்வும்

  • எம்.எச்.எம். அன்வர்

studentகாத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது. உதவிப்பிரதேச செயலாளர் ஏ சி அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தெரிவுசெய்யப்பட்ட வறியமாணவர்கள் 25 பேருக்கு சிசு திரிய எனும் 500.00 மாதாந்த உதவு தொகைக்கான பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வுக்கு திவிநெகும தலைமையக முகாமையாளர் எஸ் எப் ஆர் பரீட், முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஏ வாமதேவன், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்ஹ் எம் சீ எம் றிழ்வான் மதனி, திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் அன்ஸார், பிரதேச செயலக திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் சங்கத்தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

student

afkar ds-ansar

Published by

Leave a comment