காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் செயலாளர் ஏ.என்.எம். மிஹ்ழார் தெரிவித்தார்.
இத் திடல் தொழுகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நடாத்தி குத்பாப் பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க். எஸ்.எல்.எம். நஷ்மல் (பலாஹி) நிகழ்த்தவுள்ளார்.
ஆவனப் படம்
இதில் அனைத்து சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வேண்டுகோள் விடுக்கின்றது.
Leave a comment