Category: Your Kattankudy
-
பிள்ளை கல்வியில் பின்னடைந்துள்ளான் என்பதற்கு பெற்றோராகிய நாமும் ஒரு காரணம்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை- அஷ்ஷெய்ஹ் எம் சீ எம் றிழ்வான் மதனி
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: எவ்வளவுதான் செலவளித்தும் பாடசாலைக்கு அனுப்பியும் எனது பிள்ளை கல்வியில் குறைந்த புள்ளிகளையே பெற்றுக்கொள்கின்றான் என அங்கலாய்க்கும் பெற்றோர் இதற்கு தாமும் ஒரு காரணம் என்பதை உணர்வதில்லை. இவ்வாறு காத்தான்குடி பிரதேச செயலக சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வில் விஷேட சொற்பொழிவாளராக உரையாற்றிய பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம் சீ எம் றிழ்வான் (மதனி) தெரிவித்தார்.
-
தனது மனைவியை அசாத்சாலி பலவந்தமாக வைத்திருக்கிறார்: மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தனது மனைவியைக் கடத்தி வைத்திருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.உவைஸ் நேற்றுத் தெரிவித்தார். நான்கு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய தனது மனைவியை கடத்தி வைத்திருப்பது பற்றி விளக்கமளிப்பதற்காக 22.09.2015 செவ்வாய்க்கிழமை பம்பலப்பிட்டியில் நடத்தப்பட்ட செதியாளர் மாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
-
அரபா நோன்புப் புரளியும் மார்க்க அறிஞர்களின் மௌனமும்
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: காத்தான்குடியில் 2000 ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட நவீன தௌஹீத் வளர்ச்யையடுத்து, தாங்கள் தௌஹீத் வாதிகள் என தங்களை அடையாளப்படுத்தியவர்கள் ஆளுக்கொரு இயக்கத்தை ஆரம்பித்து மார்க்கம் என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
-
பாகிஸ்தான் சுப்பர் லீக் அணியை வாங்கும் சொஹைப் அக்தார்
கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சொஹைப் அக்தார் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார். பி.எஸ்.எல். (PSL) என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபது-20 போட்டி அடுத்த ஆண்டு (2016) பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடக்கிறது.
-
பிஸ்மி கிண்டர்காடனின் 2015 இல்ல விளையாட்டுப் போட்டி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி கிண்டர் காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 20 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
-
ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இலவசமாக பெருநாள் புத்தாடைகள் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இலவசமாக பெருநாள் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (22) ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் இடம்பெற்றது.
-
கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரம் கலை கட்டியது
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: உலக முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தியாகத்தை வழியுறுத்தும் பெருநாள் தினமான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை உலக முஸ்லிம்கள் எதிர்வரும் 24 திகதி வியாழக்கிழமை கொண்டாடவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரம் கலை கட்ட தொடங்கியுள்ளது.
-
பாராளுமன்ற உறுப்பினர்களாக மூவர் சத்தியப் பிரமாணம்
எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் லகஷ்மaன் செனவிரத்ன, பாலித தேவபெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேற்று (22) பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
-
சஜின் வாசுவுக்கு மீண்டும் விளக்க மறியல்
எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆந் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இன்று (22) உத்தரவிட்டார்.
-
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை
காத்தான்குடி: தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் உள்ள கடாபி பீச் காடன் முன்றலில் நடைபெறவுள்ளது.
-
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் சாய்ந்தமருதில்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தின் அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று (22) திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ. வணிகசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
-
முஸ்லிம் காங்கிரஸின் தேசியபட்டியல் பிரதிநிதித்துவமாக பட்டயக் கணக்காளர் றியாழ் தெரிவு செய்யப்படல் வேண்டும்
கல்குடா: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் கல்குடா தொகுதி மக்களுக்கும் மரபு ரீதியாக இறுக்கமான தொடர்பு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த உறவுமுறைபற்றி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் குறிப்பிடும் போது ‘முஸ்லிம் காங்கிரஸின் இதயம் கல்குடா தொகுதி’ என குறிப்பிட்டிருந்தார்.