Category: Your Kattankudy
-
காலத்தால் அழிக்க முடியாத காதான்குடியின் அரசியல் சரித்திரம் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
1963ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி முகம்மது ஆலிம் என்பவருக்கு மகனாய் பிறந்து தொடர்ந் தேர்சியாக 27 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் சரித்திரம் படைக்கும் அரசியல்வாதியாக பரினமித்து தனது அரசியல் சானக்கியத்தினால் அரசியல் வீறு நடையுடன் அரசியலில் முதிர்ச்சி பெற்று அதில் பல விடயங்களை நிலைமைக்கேற்றவாறு சாதுரியமான முறையில் குறித்த நேரத்தில் முடிவுகளை எடுக்ககூடிய காத்தன்குடி மண்ணின் அரசியல் நாயகனாகவே நான் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினை பார்க்கின்றேன்.
-
பங்குச் சந்தைக்கு வரும் சவுதியின் பெரு வணிக நிறுவனமான அரம்கோ!
றியாத்: அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் பங்குகளை விற்பதன் மூலம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குச்சந்தை நிறுவனத்தை உருவாக்க நினைக்கிறது சவுதி அரேபியா. இந்த நகர்வின் மூலம் அந்த நிறுவனம் உடனடியாக உலகின் மிகப்பெறுமதியான நிறுவனமாக உருவெடுக்கும்.
-
`சாண வண்டுகளின் நுட்பமான நகர்வு முறை வாகனத் தொழில்நுட்பத்தில் உதவலாம்’
லண்டன்: வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் நிலைமைகளைச் சார்ந்து தனது நகர்வுகளை தீர்மானிக்கும் சாண வண்டுகள் ஒரு சிக்கலான நகர்வுப்பாதை முறையினை பின்பற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.பந்து வடிவில் உருட்டி எடுக்கப்பட்ட சாணத்தை உருட்டிச் செல்லும் போது இந்த வண்டுகள் வானத்தை மனதில் படமாக பதித்துக் கொள்கின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
-
தமிழினியின் ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ சிங்கள மொழியில் வெளியானது
கொழும்பு: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதியதாகக் கூறப்படும் ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ என்ற நூலின் சிங்கள மொழியாக்கம் கொழும்பில் 13-05-2016 வெளியிடப்பட்டுள்ளது. பிரபல சிங்கள திரைப்பட மற்றும் நாடகக் கலை இயக்குநரான தர்மஸ்ரீ பண்டார நாயக்க வெளியிட்டுள்ள இந்த நூலை, ‘தியுனு அஸிபத்தக செவன யட்ட'(ஒரு கூர் வாளின் நிழலில்) என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக மொழியியல்துறையின் மூத்த விரிவுரையாளர் சாமிநாதன் விமல் மொழிபெயர்த்துள்ளார்.
-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணி பிரிவு கண்டனம்!
புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: காத்தான்குடி கொத்தணிக் பிரிவின் முக்கியஸ்தர்களுக்கான விஷேட அவசரக் கூட்டம் (13.05.2016) வெள்ளிக்கிழமை மாலை கொத்தணி அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணியுடன் இணைந்து செயற்பட்டு வரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
-
நேர் எதிரே காணப்பட்ட பேருந்து தரிப்பிடம் அகற்றப்பட்டது
மட்டக்களப்பு: மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் நேர் எதிரே இரண்டு பக்கங்களிலும் பேருந்து தரிப்பிடங்கள் காணப்படுவதனால் போக்குவத்து சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் இரு திசைகளிலுமிருந்து வரும்போது ஒரே நேரத்தில் இரு தரிப்பிடங்களிலும் நிறுத்துகின்றமையினால் அவ்விடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் வாகன விபத்துக்களும் மனித உயிருக்கு ஆபத்துக்களும் ஏற்படுகின்ற ஓர் அபாயகரமான நிலை அவ்விடத்தில் காணப்படுகின்றது.
-
தெற்காசிய வலயமட்ட போட்டியில் இலங்கைக்கு வெண்கல பதக்கத்தினை பெற்ற கபடி சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் சுமார் 200 வருடங்கள் மிகவும் பழைமைவாந்த மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களான செல்வன் ராசோ பென்சி,செல்வன் அமிர்தலிங்கம் மோகனராஜ் ஆகிய இரு மாணவர்களும் 2011ம் ஆண்டு தொடக்கம் கோட்டமட்டம்,வலயமட்டம்,மாகாண மட்டம்,தேசிய மட்டம் ஆகிய போட்களில் கலந்து கொண்டு புனித வளனார் பாடசாலைக்கு பெருமையையும் தேடிக் கொடுத்துள்ளதுடன் 2016ம் ஆண்டு இலங்கை 20 வயதுக்குட்பட்ட கனிஷ்ட கபடி தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டு தெற்காசிய…
-
இலவச உம்றா பயணத்திற்கான ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில்
எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டத்தின் மூன்றாவது குழுவில் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான ஆவணங்கள் மற்றும் பயணக் கொடுப்பனவு கையளிக்கும் நிகழ்வு இன்று 13.05.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
-
ருவான்டா கிரிக்கெட் வீரர் உலக சாதனை
லண்டன்: சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார். ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே தொடர்ச்சியாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
-
சீனி, ஆஸ்துமா, கொழுப்பைக் கட்டுப்படுத்தும் அற்புதமான ஒரே உணவு
வெண்டைக்காயை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதனை பச்சையாக விருப்பப்பட்டு சாப்பிடுபவர்களும் உண்டு. அதுவும் காய்கள் என்றாலே தூர ஓடும் குழந்தைகள், வெண்டைக்காய் பொறியல் என்றால் விரும்பி சாப்பிடுவதை நாம் காண்கிறோம். ஆனால் அதில் கொழ கொழ வெனெ இருக்கும் பகுதி யாருக்கும் பிடிக்காது. அதனை சமைக்கும் போது அந்த கொழகொழப்பு போய்விடும்தான். ஆனால் அந்த கொழகொழப்பு உடலுக்கு நிறைய நல்ல பலன்களைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
-
இராணுவ வெற்றி தின விழா! மஹிந்த, கோத்தாவுக்கு அழைப்பில்லை!
கொழும்பு: பாராளுமன்ற மைதானத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள இராணுவ வெற்றி விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.எனவே இந்த விழாவில் இம்முறை அவர் கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைதியான முறையில் இம்முறை வெற்றி தினம் கொண்டாடப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
-
மஹிந்தவிற்கு பாதுகாப்பு அளிக்க 500 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்!
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்க சுமார் 500 பேருக்கு மேல் விண்ணப்பம் செய்துள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,