Category: Your Kattankudy
-
கல்முனை நகரம் துருக்கி நாட்டு உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் – பிரதி அமைச்சர் ஹரீஸ்
ஹாசிப் யாஸீன் கல்முனை: துருக்கி நாட்டின் தூதுவர் துன்காசு ஹதார் உள்ளிட்ட துருக்கி வர்த்தக மன்றத்தின் தூதுக் குழுவினரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (10) பத்தரமுல்லை, வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர். விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்ட இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து…
-
பூச்சாடிகளை அகற்றும் ஷிப்லி பாரூக்கின் தீர்மானத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கைகோர்ப்பு..!! (காணொளி)
ஓட்டமாவடி அகமட் இர்ஷாட், M.T. ஹைதர் அலி காத்தான்குடி: பிரதான வீதிகளில் அண்மை காலமாக அதிகரித்துவருகின்ற விபத்துக்கள் சம்பந்தமாக அதீக கரிசரணையுடன் செயற்பட்டு வந்த பொறியியலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக்கினால் ஏற்பாடு செய்திருந்த மிகமுக்கிய கலந்துரையாடல் ஒன்று கடந்த மாதம் 2016.04.19 செவ்வாய் கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
-
அக்குறணையில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் 49ஆவது இஜ்திமா
சாய்ந்தமருது எம்.எஸ்.எம். சாஹிர் அக்குறணை: அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் 49ஆவது இஜ்திமா, பண்பாட்டு எழுச்சி மாநாடு எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அக்குறணை 07 இல் அமைந்துள்ள அரபா திருமண மண்டபத்தில் இடம் பெறவிருக்கிறது. அக்குறணை முஸ்லிம் இளைஞர் அமைப்பு, அக்குறணை தௌஹீத் ஜமாஅத் மற்றும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜம்மியத்துல் ஸபாப்வின் ஏற்பாட்டில், அஷ்ஷெய்க் நாளிர் ஜுனைதீன் (ஹாமி) தலைமையில்…
-
மூடபட்டிருக்கும் மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதியை மக்கள் பாவனைக்குத் திறக்கக் கோரிக்கை
மூடபட்டிருக்கும் மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதியை மக்கள் நலன் கருதி விரைவாக திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் NK றம்ழான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
-
65 இலங்கையரின் பெயர்களோடு வெளிவந்தது பனாமா ஆவணம்!
லண்டன்: அண்மையில் சர்ச்சையைத் தோற்றுவித்த பனாமா இரகசிய ஆவணங்களை மெசேக் பொன்சேகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேலான ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக ICIJ இணையத்தளம் செய்தி பரப்பியுள்ளது. இவ்வாறு வெளிவந்த அனைத்து ஆவணங்களையும் இந்த இணையத்தளத்தில் பார்க்க முடியும்.
-
முஸ்லீம்கள் அமெரிக்கப் பயணத்தடை: சாதிக் கானுக்கு மட்டும் ட்ரம்ப் விதி விலக்கு
வோஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் , தான் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யக்கூடாது என்று விதிக்கவிருக்கும் தடைக்கு , லண்டனின் புதிய மேயர் சாதிக் கானுக்கு விலக்களிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறிய ட்ரம்ப், சாதிக் கான் அவரது பணியை சிறப்பாகச் செய்தால் அது நல்ல விஷயமாக இருக்கும் என்றார்.
-
ஊடகவியலாளர்களுக்கான ஊடகச் செயலமர்வு
கண்டி: ஊடக செயற்பாட்டாளர்களின் ஊடகம் சார் வலுவினை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இளைஞர் ஊடகப் பேரவை Youth Media Forum (YMF) ஊடக செயற்பாட்டாளர்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கையில் உள்ள சகல ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு இம்மாதம் கண்டியில் நடாத்தவுள்ளது. இச்செயலமர்வில் இலங்கையில் உள்ள சகல பாகங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் பங்குப்பற்ற முடியும். பங்குபற்ற விரும்பும் அனைவரும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்புமாறு பேரவையின்…
-
மலேசியா பொருளாதார மாநாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ்வுக்கு விசேட அழைப்பு
கொழும்பு: எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச பொருளாதார, முதலீட்டு மற்றும் புனரமைப்பு மாநாட்டில் இலங்கை சார்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளார். பேராக் மாகாண முதலமைச்சரின் நிறைவேற்று அதிகாரி டாக்டர். மஸலன் கமிஷ் மற்றும் மலேசியா சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான நிறைவேற்று அதிகாரி சாஹூல் ஹமீட் தாவூத் உள்ளிட்ட குழுவினர் இன்று (10.05.2016) காலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து மலேசிய அரசு சார்பில் மாநாட்டுக்கான…
-
இரண்டு பிள்ளைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கர்பலா: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான சுமார் 38 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான பொலிஸ் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 24-05-2016ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இன்று 10 உத்தரவிட்டுள்ளார்.
-
கருக்கலைப்பை ‘சட்ட வரைமுறைக்குள்’ அனுதிக்க வேண்டும்
கொழும்பு: நாட்டில்சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாக கவலைகள் அதிகரித்துள்ளன. இதனால், சில நிபந்தனைகளுடன் சட்டரீதியான வரைமுறைகளுக்குள் கருக்கலைப்பை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
-
போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான அதிபர்களுக்கான செயலமர்வு காத்தான்குடியில்
எம்.ரி.எம்.யூனுஸ் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு நடாத்தப்பட்ட தரம் ||| போட்டிப் பரீட்சையில் சித்தியெய்திய அதிபர்களுக்கான கிழக்கு மாகாண செயலமர்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இன்று 09.05.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது.
-
பெண்ணும் பேஷ்புக்கும்
பெண் பற்றி பேஷ் புக்கில் பெரிதாக செய்தி வரும்-அதை பின் தொடர்ந்து தன் கருத்தை பதிவார்கள் பலபேர்கள். தன் மனம் உண்மையிலே தட்டிக் கேட்க நினைத்தாலும் தன் மானம் போகும் படி தாறுமாறாய் ஏச்சு விழும் என்பதனால் இதுவன்றோ பெண் புரட்சி என்று சொல்லி பெரிதாகப் புகழ்ந்துரைப்பார் சரிதான் என உரைப்பார்.