நேர் எதிரே காணப்பட்ட பேருந்து தரிப்பிடம் அகற்றப்பட்டது

bus standமட்டக்களப்பு: மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் நேர் எதிரே இரண்டு பக்கங்களிலும் பேருந்து தரிப்பிடங்கள் காணப்படுவதனால் போக்குவத்து சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் இரு திசைகளிலுமிருந்து வரும்போது ஒரே நேரத்தில் இரு தரிப்பிடங்களிலும் நிறுத்துகின்றமையினால் அவ்விடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் வாகன விபத்துக்களும் மனித உயிருக்கு ஆபத்துக்களும் ஏற்படுகின்ற ஓர் அபாயகரமான நிலை அவ்விடத்தில் காணப்படுகின்றது.

இந்நிலைமையினை கருத்திற் கொண்டு அண்மையில் 28.04.2016அந்திகதி அவ்விடத்திற்கு நேரில் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளையும் நேரில் வரவழைத்து நிலைமையினை சுட்டிக்காட்டினார்.

bus stand

இதனையடுத்து குறித்த இரு பேரூந்து தரிப்பு நிலையங்களும் நேர் எதிரே இருப்பது பொருத்தமற்றது எனவும் அவற்றில் ஒரு பேரூந்து நிலையத்தினை அகற்றுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதோடு, இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி மூலமாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

shibly

இருந்தபோதிலும் நேற்றுவரை அகற்றப்படவில்லை என்ற விடயத்தினை 12.05.2016ஆந்திகதி (நேற்று) நடைபெற்ற மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து 13.05.2016ஆந்திகதி இன்று காலை அந்த பேரூந்து தருப்பிடம் மட்டக்களப்பு மாநகர சபையினால் அகற்றப்பட்டது.

M.T. ஹைதர் அலி
செய்தியாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s