Category: Your Kattankudy
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற தொழில் சந்தை நிகழ்வு
எம்.ரி.எம்.யூனுஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு 18.06.2016 புதன்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
வெள்ளத்தில் படையெடுக்கும் முதலைகள்
கொழும்பு: நாட்டில் பெய்து வரும் கனமழையில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால், ஆறுகளில் உள்ள முதலைகள் வீடுகளுக்கு படையெடுத்து வரும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், முதலைகள் வீடுகளுக்கு அருகில் வருவது குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
மதியன்பனின் ‘வலிக்கிறது வாங்களேன் உம்மா..’ கவிதை நூல் மலேசியாவில் வெளியீடு
பைஸர் அமான், M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளருமான மதியன்பன் மஜீத் அவர்கள் எழுதிய ‘வலிக்கிறது வாங்களேன்’ உம்மா எனும் கவிதை நூல் எதிர் வரும் 21.05.2016 அன்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வின்போது கவிஞரின் மற்றுமொரு நூலான ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு’ எனும் நூலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இலக்கிய…
-
உலமாக்களை உருவாக்கிய உத்தமனுக்கு மகத்தான விழா
ஏ.எல்.டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களின் கௌரவிப்பு நிகழ்வு மற்றும் “ஷைகுல் பலாஹ் சரிதை” நூல் வெளியீட்டு விழா தொடர்பான ஊடகவியாலர்கள் சந்திப்பு (17.05.2016 செவ்வாய்) நேற்று காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் நடை பெற்றது.
-
கைத் தொலைபேசி ஊடாக சிறுவர்களை குறி வைக்கும் ஐ.எஸ் இயக்கம்
இஸ்லாமியப் பேரரசு [கிலாபத் ] என்ற சுலோகத்தோடு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோன்றிய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு சிரியாவின் ஒரு பகுதியையும் ஈராக்கின் ஒரு பகுதியையும் கைப்பற்றி சுயாட்சியைப் பிரகடனப்படுத்தியது. தங்களுடன் இணையுமாறு உலக முஸ்லிம்களுக்கு இந்த இயக்கம் அழைப்பு விடுத்தது.இஸ்லாமிய பேரரசு என்ற பதத்தால் கவரப்பட்ட-ஏமாற்றப்பட்ட ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர். இன்னும் இணைவு தொடர்கின்றது.ஐரோப்பாவைச் சேர்ந்த இளைஞர்களே இதில் அதிகம்.
-
இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
காத்தான்குடி: காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் ஷைகுல் பலாஹ் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் அவரது சரிதை நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 20.05.2016 வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
பிர்தெளஸ் நகர் வீதி புனரமைக்கப்படாமையால் பிரதேச மக்கள் விசனம்
எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி 02 பிர்தெளஸ் நகர் பிர்தெளஸ் பாடசாலைக்கு அருகிலுள்ள குறுக்கு வீதி நீண்ட காலமாக செப்பனிடப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் நீர் வீதியை ஆக்கிரமித்து காணப்படுவதால் பிரதேசவாசிகள் வேற்று வீதியையே பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
-
கேகாலை நிலச்சரிவில் சிக்கியவர்களில் 400 பேர் மீட்பு
கேகாலை: கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றது.பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட ஏராளமானோர் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியாளர்களினால் இன்று இரவு வரை 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
“விமர்சனங்களை எப்படி கையாள்வது ..? சில ஆலோசனைகளும் குறிப்புகளும்! ” பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப் பிரிவு சமூக அரசியல் உழைப்பில் ஈடுபடும் போது ‘விமர்சனங்கள்’ தவிர்க்க முடியாதவை. NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் எழுதிய ஆக்கம் ஒன்றினை அனுப்பி வைக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களே சூடான விமர்சனக் களமாக மாறிவருகின்றன. அந்த வகையில், விமர்சனங்களை கையாளும்போது நமது சகோதரர்கள் கனிக்க வேண்டிய சில குறிப்புகளையும் ஆலோசனைகளும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
-
கடற்பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவக்கூடும்
மட்டக்களப்பு: நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் நிலவிய தாழமுக்க மண்டலம் , நாட்டை விட்டு விலகி நாட்டின் வடபகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டை சுற்றி கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று விட்டு விட்டு வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நிவாரணங்களை துரிதப்படுத்துக! அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்
கொழும்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும், அங்கு தேவைப்படும் நிவாரணப் பொருட்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.