இலவச உம்றா பயணத்திற்கான ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில்

  • எம்.ரி.எம். யூனுஸ்

umrah hizbullahகாத்தான்குடி: நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டத்தின் மூன்றாவது குழுவில் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான ஆவணங்கள் மற்றும் பயணக் கொடுப்பனவு கையளிக்கும் நிகழ்வு இன்று 13.05.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அல்லது ஹஜ் கடமைகளை இதுவரைக்காலமும் நிறைவேற்றாத 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவசமாக உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரனை வழங்கியுள்ளது.

umrah hizbullah

அதற்கமைய நாடாளவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட முதல் குழு கடந்த மாதம் தங்களது கடமையை நிறைவேற்றி நாடு திரும்பியிருந்தது. இரண்டாவது குழு தற்போது உம்றா கடமைகளை நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில், மேலும் 100 பேர் கொண்ட மூன்றாவது குழு எதிர்வரும் 19 ஆம் திகதி புனித மக்கமா நகர் நோக்கி புறப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சவூதி அரேபியாவிலிருந்து வருகை தந்த ஹபீப் அபூபக்கர் அலி மற்றும் அஷ்ஷேய்க் அஹ்மத் ஸாலிஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s