`சாண வண்டுகளின் நுட்பமான நகர்வு முறை வாகனத் தொழில்நுட்பத்தில் உதவலாம்’

dungலண்டன்: வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் நிலைமைகளைச் சார்ந்து தனது நகர்வுகளை தீர்மானிக்கும் சாண வண்டுகள் ஒரு சிக்கலான நகர்வுப்பாதை முறையினை பின்பற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.பந்து வடிவில் உருட்டி எடுக்கப்பட்ட சாணத்தை உருட்டிச் செல்லும் போது இந்த வண்டுகள் வானத்தை மனதில் படமாக பதித்துக் கொள்கின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சாணப்பந்தினை உருட்டிச் செல்லும் போது தாம் ஏற்கனவே பதிவு செய்து கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பாதையின் வரைபடத்தை தாம் பயணிக்கும் இடத்துடன் ஒப்பிட்டு தமது பாதையை தீர்மானிக்கின்றன.

dung

இந்த சாண வண்டுகளை முழுமையாக புரிந்துகொண்டு அவற்றின் பாதையை அறியும் திறனை தெரிந்து கொள்வது ஓட்டுனர் இல்லாத வாகனங்களை வடிவமைப்பதில் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Published by

Leave a comment