ஸிகா வைரஸ்: ‘1970களில் செய்த தவறுக்கான தற்போதைய தண்டனை’

Zika virusலண்டன்: கொசுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கையில் 1970களில் நேர்ந்த மிகப்பெரிய தோல்வியே தற்போது உலக அளவில் ஸிகா வைரஸ் பரவலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

1960களில் முன்னெடுக்கப்பட்ட கொசுக்களை அழிக்கும் செயற்திட்டத்தின் வெற்றியை தொடராமல் கைவிட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் தெரிவித்திருக்கிறார்.

கொசுக்களிடம் படிப்படியாக அதிகரித்த கொசுமருந்துக்கான எதிர்ப்பும் கொசுக்களை அழிப்பதற்குத் தேவையான அரசியல் தலைமைகளின் முன்னெடுப்பு இல்லாமையும் சேர்ந்து கொசுக்களையும் அவற்றின் மூலம் பரவும் நோய்களையும் புதிய வீரியத்துடன் திரும்ப வருவதற்கான காரணங்களாக மருத்துவர் சான் பட்டியலிட்டிருக்கிறார். உலக அளவில் அறுபது நாடுகளுக்கும் அதிகமாக தற்போது ஸிகா வைரஸ் பரவியுள்ளது.

Zika virus

Published by

Leave a comment