‘தங்க’ வெள்ளமும் நிவாரண சேகரிப்பும்

  • AK-48

money ntjகாத்தான்குடி: வெள்ளம் வந்தது.. தற்பொழுது வடிந்தோடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அகதிமுகாம்களில் தொடர்ந்தும் அநாதரவாக இருக்கின்றனர். அரசியல்வாதிகள் ஆடம்பர இல்லங்களில் குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தியா உட்பட இதர நாடுகள் உட்பட, பல மில்லியன் பெறுமதியான உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென இலங்கையிடம் அமானிதமாகக் கையளித்துள்ளன.

இது தவிர பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அப்பால் உள்ள குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் பல மில்லியன் பெறுமதியான பணமும் பொருட்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வுதவியில் பணக்காரர்கள் மாத்திரமன்றி அன்றாட ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளும் மனமுவந்து வாரி வழங்கியுள்ளமை மனதை நெகிழச் செய்துள்ளது.

அரசியல் வாதிகள் எவராவது தனது சொந்தப்பணத்தில் எதையாவது இம்மக்களுக்கு கொடுத்துள்ளார்களா என்பதை தேட வேண்டியுள்ளது.

செவிகளைப் பிடித்து இழுத்துச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை வழங்கும் தொண்டர் நிறுவனங்களோடு நிறுத்த வேண்டப்படவேண்டிய அப்பிரதேச அரசியல்வாதிகள், ஒரு பத்துநிமிட விஜயத்துக்காக ஊடகங்களால் புகழப்படும் பரிதாபங்களே இவ்வெள்ள அணர்த்தத்தில் பல ஊடகங்களின் பிழைப்புக்களாக இருந்தன.

ஒரு நாட்டில் இவ்வாரண ஓர் நெருக்கடி வருமாயின் அரசாங்கமும் அதனது அரசாங்க படைகளும் களத்தில் இறங்க வேண்டும். யுத்தமில்லாத இலங்கையில் பல்லாயிரம் இராணுவத்தினரும் பொலிஸாரும் முகாமுக்குள்ள முடங்கிக்கிடக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்மவர்களே தோல் கொடுக்க முன்வருவது பேருதவியாக இருந்த போதிலும், இவவாறான செயற்பாடுகளில் தன் கடமையைச் செய்ய வேண்டிய அரசாங்கமும், அதன் படையினரும் பின்வாங்கும் நிலைபோலவே தோற்றம் பெறுகின்றன.

பெருமைக்குப் போல் சிலர் பணங்களையும் பொருட்களையும் வசூலித்து வந்தனர். குழுக்களுக்கிடையில் போட்டிகளும், பொறாமைகளும் அதிகரித்தன. தன்னாலேயே அல்லது தங்களாலேயே இவ்வளவு சேகரிக்க முடிந்தது எனவும் பலர் மார்பு தட்டுவதையும் சமூக வலைத்தளங்கள் ஊடாகக் காண முடிகிறது.

இவ்வாறு திரட்டப்பட்ட பணங்களை திரட்டப்பட்ட அந்தந்த ஊர்களிலுள்ள பரம ஏழைகள், கல்வியைத் தொடர வழியில்லாமல் குடிசைக்குள் முடங்கிக்கிடக்கும் சிறார்கள், விதவைப் பெண்கள் போன்றோருக்கு வழங்கி இருப்பின் அவை அவ்வூர்களுக்கு மகத்தான பயன் உடையதாக அமைந்திருக்கும்.

சுனாமி வந்தது. அழிவை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அச்சுனாமி தங்கச் சுனாமி என அழைக்கப்பட்டது. சுனாமியின் பேரால் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டுப் பணங்களும் பொருட்களும் அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கிக்கொண்டன. இதன் ஒருபகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்ன. பாதிக்கப்பட்டவர்கள், படாதவர்கள் என பலருக்கு சில காசுகளும் பொருட்களும் சென்றடைந்தன. ஆனால் முக்கால்வாசி பணங்களும் பொருட்களும் தங்கச் சுனாமியாக அரசியல்வாதிகளின் பொக்கட்டுக்களில் நிலைகொண்டிருந்தன.

இப்போதும் இவ்வெள்ளமும் தங்க வெள்ளமாகவே இருக்கப்போகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாடுகள் வழங்கியுள்ள பொருளும் பணமும் போதுமானவை. மென்மேலும் இன்னும் பல நாடுகள் உதவக் காத்திருக்கின்றன.
ஏழை எளியோரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் சில இடங்களில் பெறுமதி இல்லாமல் வீண் விரயமாக்கப்பட்டன. இன்னும் சில இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.

தொண்டார்வ நிறுவனங்களின் கவத்திற்கு:

அணர்த்தம் வந்தால் முதலில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுங்கள். அரசாங்கத்தின் உதவியைப் பெறுவதில் முன் நில்லுங்கள். பெரும்பாலும் ஏழைப்பொதுமக்களிடமிருந்து உங்களால் பல இலட்சங்களைத் வசூலிக்க முடியுமென்றால் நாம் வாக்களித்து இந்நாட்டை ஆளும் அரசாங்கத்திடமிருந்து ஏன் உங்களால் பணத்தையோ பொருட்களையோ பெற முடியாது…?

எடுத்ததெற்கெல்லாம் பொதுமக்களிடம் வசூலை எதிர்பார்க்காமல் நாங்கள் வாக்களித்து, இந்நாட்டை ஆளும் அரசாங்கத்தை அணர்த்தங்களின் போது தொண்டார்வ நிறுவனங்கள் முதலில் கோரிக்கை, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை யுவர்காத்தான்குடி ஊடாகக் கேட்கின்றோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s