மடவளை தேசியப் பாடசாலையில் ஆசிரியருக்கு முட்டை வீச்சு!

eggகண்டி: மடவளை தேசியப் பாடசாலையில் ஆசியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஏற்பட்ட மோதல் நிலையினால் ஆசிரியர்கள் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் பாடசாலையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டி மடவளை தேசிய பாடசாலையில் இன்று பாடசாலை அதிபர் நூருல் ஹிதாயா தலைமையில் பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் ஆசிரியர் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்து நபர் குறுக்கீடு செய்து ஏதோ கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு முறுகல் நிலை ஏற்பட பின்னர் முட்டை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Published by

Leave a comment