பத்திரிகையாளர் பைரூஸின் ஓரக்கண் பார்வை…. NTJ வன்மையாகக் கண்டிக்கிறது

ntj logoகடந்த 22.05.2016 ம் திகதியன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மல்வானைப் பகுதியில் அனர்த்த நிவாரண உதவியை வழங்கியது. இந்தக்கட்டத்தில் நபவிய்யா எனும் தரீக்கா குழுவினர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களை மோசமாக வசைபாடியும் ஆயுதங்களால் தாக்கியதையும் அறிந்திருப்பீர்கள்!

இவ்வாறு வன்முறையாக நடந்த தரீக்கா குழுவினரின் கீழ்த்தரமான செயற்பாடுகளை பலரும் கண்டித்து வருகின்ற இச்சூழலில் காத்தான்குடி புஹாரி பலாஹியின் மகனும் பத்திரிகை ஆசிரியருமான பைரூஸ் என்பவர் இந்த விடயத்தில் முழுக்க முழுக்க பக்கசார்பாக எழுதியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

பத்திரிகையாளர் பைரூஸின் பக்கசார்பு வார்த்தை
வெள்ளம் புகுந்த பகுதிகளை கழுவி, சுத்தப்படுத்தி, குப்பை கூழங்களை அகற்றுவது என்பது சாதாரணமானதொரு பணியல்ல. சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் ஒரு வீட்டை சுத்தப்படுத்த ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள் கூட போதாமலிருக்கின்ற நிலையில் இப் பணியில் ஈடுபடுகின்ற நபவிய்யா இளைஞர் அணியின் அனைத்து உறுப்பினர்களையும் வன்முறையாளர்களாக கருதி வசைபாடுவது ஏற்கத்தக்கதல்ல.
நபவிய்யா இளைஞர் அணியைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்டோர் 15 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து பல கஷ்டமான பகுதிகளிலும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டதை அவதானித்ததன் நிமித்தமே சில புகைப்படங்களை பகிர்ந்து பதிவொன்றை இட்டிருந்தேன்.

ஆனால் அதே படங்களை வைத்து அவர்கள் எல்லோரையும் வன்முறை விரும்பிகளாக சித்தரிப்பது விரும்பத்தக்கதல்ல
எமது பதில்
தரீக்காவாதிகள் அனைவரும் வன்முறை விரும்பிகளாக அங்கு செயற்பட்டனர் என நாம் சொல்லவில்லை.

பெரும்பான்மையான தரீக்காவாதிகள் வன்முறையாக செயற்பட்டார்கள். தரீக்காவாதிகளில் விரல் விட்டெண்னக் கூடிய மிகச் சிலரே இதை தடுத்தனர். இதுதான் உண்மையான நிலவரமாகும்.
தரீக்காவாதிகளின் பணிகளை மாத்திரம் இவர் இங்கு மேம்படுத்தி எழுதியுள்ளார். நாம் அங்கு சென்று செய்த பணிகள் பற்றி இவர் கண்டு கொள்ளவே இல்லை. தரீக்காவாதிகளும் பணி செய்தனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரும் பணி செய்தனர் என சொல்ல வேண்டிய இடத்தில் அதை சொல்லாமல் தரீக்காவாதிகளை மாத்திரம் இவர் எழுதியிருப்பதானது இவரது பக்கசார்பை தெளிவாகக் காட்டுகின்றது. அது மாத்திரமல்ல இந்த அசம்பாவிதம் நடைபெற்றதன் பின்னர் ஊர்மக்கள் மற்றும் சிங்கள சகோதரர்கள் சேர்ந்து வன்முறையாளர்களை தாக்கியது இந்த ஓரக்கண் ஊடகவியாளருக்கு தெரியாமல் போய் விட்டது. இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டிருப்பது நாங்களாக இருந்தும் அதை இவர் கண்டு கொள்ளவில்லை.

பணிகள் என்பது இடங்களுக்கேற்ப வித்தியாசப்படும். வீடுகளை சுத்தப்படுத்துவதென்பது மட்டும்தான் சிரமமான பணி போன்று இவர் சித்தரித்துள்ளார்.
வீதிவிதியாக இறங்கி காலில் வலி ஏற்படும் அளவிற்கு நடந்து சென்று மக்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பணம் திரட்டுவது சிரமமான காரியமில்லையா?

12 இலட்சம் ரூபா பொருட்களை பொதி செய்வது சிரமமான காரியமில்லையா?
அத்தனை பொருட்களையும் திரட்டி எடுத்துக் கொண்டு சிரமத்துடன் லொறியில் ஏற்றி செல்வது சிரமமான காரியமில்லையா?

அப்பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குவது சிரமமான காரியமில்லையா?
இந்த அனர்த்தத்தில் பல்வேறு குழுவினரும் களமிறங்கி வேலை செய்துள்ளனர். எவரது பணிகளையும் நாம் குறைத்து மதிப்பிட இயலாது. நபவிய்யா தரீக்கா குழுவினரும் பங்களிப்பு செலுத்தியதை நாம் மறுக்கவில்லையே! நிலமை இவ்வாறிருக்க தரீக்கா குழுவினரின் பணிகளை மாத்திரம் இவர் மேம்படுத்தி எழுதியிருப்பது இவரது ஓரக்கண் பார்வையையே இங்கு எமக்குக் காட்டுகின்றது.

மேலும் முரண்பாடு ஏற்படக் கூடாது என்பதைச் சொல்ல வரும் இவர் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமாக பக்கசார்ப நிலையாக எழுதியிருப்பதுதான் உண்மையில் பாரிய முரண்பாட்டை தோற்று விக்கும் என்பதை இவர் சிந்திக்கத்தவறி விட்டார். இவரது சிந்தனை அவைரையும் மேவிப் போவதென்றபடியால் இந்த முரண்பாட்டின் உண்மை நிலையை விளக்காமல் தனது நச்சுக்கருத்தை விதைப்பதில் மாத்திரம் குறியாக இருந்துள்ளார். இவர் மல்வானைக்கு வந்ததே தகவல் சேகரிப்பதற்குத்தான் (data collection) என எமது ஜமாஅத் உறுப்பினரிடம் அங்கு வைத்தே கூறியிருந்தார். அப்படியாயின் இந்த அசம்பாவிதத்தின் உண்மைத் தகவல்களை மாத்திரம் சேகரிக்க மறந்து விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா?

இந்த வெள்ள அனர்தத்தின் போது பலரது உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது போன்று இவரது முகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதே உண்மையாகும். அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s