காத்தான்குடி நகரசபையின் சபை அமர்வில் கலந்து கொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கடந்த சில மாதங்களாக காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் இருந்து வந்தனர்.

ஆனால் அண்மையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் காத்தான்குடி நகரசபையின் சபை அமர்வுகளை பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதெனவும், அழைப்பதெனவும் நகர சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கிணங்க 10திகதி இன்று பிற்பகல் காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற அவசர  சபை அமர்வில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி நகரசபையில் வெளிப்படத்தன்மை பேணுமாறும் நகரசபை அமர்வுகளை பார்வையிட ஊடகவியலாளர்களை அனுமதிக்குமாறும் கோரி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னாள்  கவனஈர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

Published by

Leave a comment