காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு இன்று

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு 10-06-2013 இன்று திங்கட்கிழமை பி.பகல் 3.மணிக்கு காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு காத்தான்குடி சின்னத் தோணா, பெரிய தோணா அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அது தொடர்பாக தவிசாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இவ் அமர்வில் காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் ஜெஸீம், காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கான பாக்கீர், அலிசப்ரி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கா-குடி நகர சபை உறுப்பினர் நஸீர் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா ஆகியார் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

குறித்த அவசர சபை அமர்வில் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் சியாட் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கா-குடி நகர சபை உறுப்பினர் சபீல் நளீமி ஆகியார் சபை அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

??????????????????????????????????????????????????????????????asfar

Published by

Leave a comment