Author: yourkattankudy.com
-
‘லண்டனில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மீட்பு’
லண்டன்: லண்டனில் கடந்த 30 வருடமாக மிகவும் மோசமான நிலைமையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் தானும் இன்னும் இரு பெண்களும் அடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதாக ஒரு பெண் தமக்கு தொலைபேசியில் அழைத்துக் கூறியதாக ”ஃபிரீடம் சரிட்டி” என்னும் தொண்டு அமைப்பு கூறியுள்ளது.
-
‘இராணுவம் குறைக்கப்பட வேண்டும்’: விதவைகள் மாநாடு
மட்டக்களப்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 90 ஆயிரம் குடும்பங்களுக்கு பெண்களே தலைமை தாங்குவதாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
-
மட்டு-திருமலை வீதியில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு 75000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் 8000 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை – மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரணை!
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மூன்று கடைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு இரண்டு கடைகளில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
-
கிழக்கு மாகாண செயலாற்றுத்திறன் போட்டியில் கிண்ணியா நகரசபை தொடர்ந்து இரண்டாவது வருடமாக இரண்டாமிடம்
ரைஸ் கிண்ணியா: 2012 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அமைச்சினால் கிழக்கு மாகாணத்திலுள்ள நகரசபைகளுக்கிடையில் நடத்தப்பட்ட நிருவாகத்திறன், செயலாற்றுத்திறன் மதிப்பீட்டுப் போட்டியில் கிண்ணியா நகரசபை தொடர்ந்து இரண்டாவது வருடமாக இரண்டாம் இம்முறையும் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.
-
கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூப் முன்னெடுக்கும் கிண்ணியா வடிகாலுக்கான சீர்படுத்தப்பட்ட வரைபடத்தின் இறுதிக்கட்ட சந்திப்பு!
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் முயற்சியின் பயனாக நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீரான வடிகாலமைப்பினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் புறநெகும திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை காணி மறுசீரமைப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின்
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் 8 -வறிய குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான்/டீன் பைரூஸ் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் இயங்கும் நிறுவனங்களில் பழமைவாய்ந்த நிறுவனமாகத் திகழும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் மஜ்லிஸுல் ஸுறா கூட்டு ஸகாத் நிதியத்தினால் கஷ்டத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கென புதிய காத்தான்குடி நூராணியா மையவாடி
-
சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன் (குர்ஆனைப் படியுங்கள்)
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில்
-
முரளிக்கு தொடரும் எதிர்ப்புக்கள்: சாவகச்சேரி நகரசபை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!
– SHM சாவகச்சேரி: இலங்கையில் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதைப் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக சாவகச்சேரி நகரசபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
-
வரவு செலவுத் திட்டம்-2014
ஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கும் ரூ 1,200 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு விவசாயிகளுக்கு ரூ 1,250 ஓய்வூதியம்
-
3 கோடியே 50 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் பாலமுனையில் மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கையளிப்பு!
– முகம்மட் சஜி பாலமுனை: மட்டக்களப்பு பாலமுனையில் 3 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.
-
கோல்டன் பூட் விருது மெஸ்ஸிற்கு
பார்சிலோனா: ஜரோப்பிய உள்ளூர் போட்டிகளில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சிக்கு ‘தங்க பூட்’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப்பில் நடைபெறும் 2012-2013 சீசனில் 46 கோல்கள் அடித்துள்ளார். இதற்காக இவருக்கு தங்க பூட் விருது வழங்கப்பட்டுள்ளது.
-
‘பட்ஜட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு மீண்டும் அதிகரிப்பு’
கொழும்பு: அரசதுறையினர், விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்கான சில நன்மைகளை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.