பார்சிலோனா: ஜரோப்பிய உள்ளூர் போட்டிகளில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சிக்கு ‘தங்க பூட்’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப்பில் நடைபெறும் 2012-2013 சீசனில் 46 கோல்கள் அடித்துள்ளார். இதற்காக இவருக்கு தங்க பூட் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே 2009–10 (34 கோல்கள்), 2011–12 (50 கோல்கள்) ஆண்டிலும் தங்க பூட் விருதை பெற்று இருந்தார்.
இந்த விருதை 3 முறை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை 26 வயதான மெஸ்சி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment