பாலமுனை: மட்டக்களப்பு பாலமுனையில் 3 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தக் குழுவின் தலைவர் எம்.எம்.முபாரக் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் டயடகிருள ஜய்க்கா திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட 15 கொங்ரீட் வீதிகலும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்களும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் பங்கு பற்றுதலுடன் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.வைபவத்தில் கி.ச.உறுப்பினர் எம்.எப்.சிப்லி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு பாலமுனை கிராமம் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment