கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் முயற்சியின் பயனாக நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீரான வடிகாலமைப்பினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் புறநெகும திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை காணி மறுசீரமைப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின்
பொறியியளாளர்கள் மூலமாக குறித்த வடிகாலமைப்பு சீர்படுத்தலுக்கான முழுமைப்படுத்தப்பட்ட வடிகாலமைப்பு வரைபடதின் இறுதிக்கட்ட தயாரிப்புக்கான கலந்துரையாடல் இன்று நகரசபை கேட்போர் கூடத்தில் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அண்மைக் காலங்களில் மழை காரணமாக வெள்ளம் ஏற்படும் போது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கையினை முன்னெடுக்க 27 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகரபிதா தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பினை தொடர்ந்து குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் நேரடியாக சென்று வடிகாலமைப்பு சம்பந்தமாக பார்வையிட்டுள்ளதாகவும் இதன்போது நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், இலங்கை காணி மறுசீரமைப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பொறியியளாளர்கள், நகரசபை தெழிநுட்ப உத்தியோகத்தர் ரி. சுசிதரன், எம்.பி. நாஜீன், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் எம்.எம். அலியார், எம்.ஏ.எம். ரஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment