கிழக்கு மாகாண செயலாற்றுத்திறன் போட்டியில் கிண்ணியா நகரசபை தொடர்ந்து இரண்டாவது வருடமாக இரண்டாமிடம்

unnamed (4)ரைஸ்

கிண்ணியா: 2012 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அமைச்சினால் கிழக்கு மாகாணத்திலுள்ள நகரசபைகளுக்கிடையில் நடத்தப்பட்ட நிருவாகத்திறன், செயலாற்றுத்திறன் மதிப்பீட்டுப் போட்டியில் கிண்ணியா நகரசபை தொடர்ந்து இரண்டாவது வருடமாக இரண்டாம் இம்முறையும் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. 

இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டதன் மூலம் தேசிய மட்ட செயலாற்றுத்திறன் மதிப்பீட்டு போட்டிக்கும் தெரிவாகியுள்ளது. தேசிய மட்ட போட்டியில் வெற்றியை தனதாக்கிக் கொள்ள நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் வெற்றிக்கான சகல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக இதற்கு பல வழிகளிலும் உதவிகளை வழங்கிய நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளை நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். 

unnamed (4)

Published by

Leave a comment