மட்டக்களப்பு: மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மூன்று கடைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு இரண்டு கடைகளில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் சஜான் எலக்ற்றோணிக் கடையில் 8000 ஆயிரம் ரூபாவும் ஜெ எலிஸபத் எனும் புடவை கடையில் 75000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மூன்று பேக் சாரியும் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு ஆதித்யா எனும் டிஜிடல் அச்சகத்தில் கடை மற்றும் உடைக்கப்பட்டுள்ளதாக குறித்த கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள்; மேலும் தெரிவிக்கையில் இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்று கடைகளின் கூரைக்கு மேல் ஏறி ஓடுகளை கழட்டி கடைகளுக்குள் திருடர்கள் நுழைந்து கொள்ளையிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை எங்களுடைய கடைகளுக்கு வந்து உடைக்கப்பட்ட இடத்தையும் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் இருந்த இடத்தையும் மோப்ப நாய் மற்றும் கை விரல் அடியாளம் போன்ற சோதனைகளை செய்தாகவும் தெரிவித்தனர்.
இக்கொள்ளை தொர்பில் மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment