காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் 8 -வறிய குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

unnamed (7)பழுலுல்லாஹ் பர்ஹான்/டீன் பைரூஸ்

காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் இயங்கும் நிறுவனங்களில் பழமைவாய்ந்த நிறுவனமாகத் திகழும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் மஜ்லிஸுல் ஸுறா கூட்டு ஸகாத் நிதியத்தினால் கஷ்டத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கென புதிய காத்தான்குடி நூராணியா மையவாடி

வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 2வது வீட்டுத்திட்ட 8 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 22-11-2012 திகதி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவரும், கூட்டு ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவருமான எம்.ரி.எம்.ஹாலித் ஜேபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் மற்றும் மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு குறித்த வீடுகளுக்கான சாவிகளை வறிய குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தின் செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன்,உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இன்று வழங்கி வைக்கப்பட்ட இவ் வீட்டு திட்டத்தில் 6வீடுகள் வறிய குடும்பங்களுக்கும் 02 வீடுகள் சம்மேளன நலன்புரி அமைப்பைச் சேர்ந்த முஅல்லபதுல் குலூப் சகோதரர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு ஸகாத் நிதியத்தினால் 08 -வறிய குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு பட விளக்கம்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் மஜ்லிஸுல் ஸுறா கூட்டு ஸகாத் நிதியத்தினால் கஷ்டத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கென புதிய காத்தான்குடி நூராணியா மையவாடி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 2வது வீட்டுத்திட்ட 8 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று 22 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் சம்மேளனத்தின் தலைவரும், கூட்டு ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவருமான எம்.ரி.எம்.ஹாலித் ஜேபி தலைமையில் இடம்பெற்ற போது சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோர் குறித்த வீடுகளுக்கான சாவிகளை வறிய குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கையளிப்பதையும்,கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment