Author: yourkattankudy.com
-
வீட்டுப் பண்ணையாளர்களுக்கான ஒரு மாத காலம் பூர்த்தியான நாட்டுக் கோழிக்குஞ்சுகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான இல்மி அஹமட் லெவ்வை அவர்களினால் இன்று (02.04.2014) காலை 9.30 மணியளவில் காத்தான்குடி செஞ்சிலுவைச்சங்க மண்டபத்தில் – வீட்டுப் பண்ணையாளர்களுக்கான ஒரு மாத காலம் பூர்த்தியான நாட்டுக் கோழிக்குஞ்சுகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது.
-
பிரிட்டனின் கல்வி ‘ஏற்றுமதி’ வருமானத்தில் வீழ்ச்சி
லண்டன்: ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய வெளிநாட்டு வருமான வழிகளில் ஒன்று தான் அதன் கல்வி. நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் ஆண்டுக்கு 10 பில்லியன் பவுண்டுகளை கல்வியே ஈட்டித்தருகிறது. வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு கிடைக்கும் வருமானத்துக்கும் இங்கிருந்து செல்லும் வெளிநாட்டு செலவினத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கின்ற இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஈட்டப்படுகின்ற இந்த வருமானம் மிக முக்கியமானது.
-
பறிபோனது பாகிஸ்தானின் அரைஇறுதி பெருமை!
டாக்கா:இருபது20 உலகக் கிண்ணத்தொடரில் குறைந்தது அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பறிகொடுத்தது. பாகிஸ்தான் அணி 2007ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வி கண்டாலும், 2009ம் ஆண்டு சம்பியன் ஆனது.
-
இலங்கையில் சிவில் அமைப்புக்கள் தடை!
SHM லண்டன்: வெளிநாடுகளில் தடைசெய்யப்படாத சிவில் அமைப்புகளை தடை செய்ததன் மூலம் இலங்கை சர்வதேச மட்டத்தில் மேலும் குழப்பமான பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மேற்கிந்தியாவின் பலத்தை வீழ்த்துமா இலங்கை?
SHM டாக்கா: கிரிக்கட் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பித்த 1974 மற்றும் அதன் பின்னரான 1980களில் கிரிக்கட் வரலாற்றில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள்தான் மேற்கிந்தியத் தீவுகள்அணி. மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி பெற குறிப்பாக ஆசிய அணிகள் அன்று பல வருடங்கள் காத்திருந்ததும் வரலாறு.
-
மலேசிய விமானம் மாயமான காரணம் தெரியாமலேயே போகலாம்: மலேசிய பொலிஸ் அதிகாரி
S-90 கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமானதற்கான காரணம் தெரியாமலேயே போகலாம் என்று மலேசியா எச்சரித்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி மாயமாகி இந்திய பெருங்கடலுக்குள் விழுந்துவிட்டதாகக் கூறப்படும் மலேசிய விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
-
சிலி: 8.1 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி, சுனாமி எச்சரிக்கை- 300 பெண் கைதிகள் தப்பியோட்டம்!
– SHM சான்டியாகோ: தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் வட மேற்கு கடல் பகுதி அருகே நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
-
ஜெர்மனியின் விமான நிறுவனமான லுஃப்தான்ஸா அடுத்த மூன்று நாட்களில் சுமார் 4000 சேவைகளை ரத்து செய்கிறது!
லுஃப்தான்ஸா: பணி நிலைமகளை மேற்கோள்காட்டி, விமான ஓட்டிகள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாலேயே இந்த அளவுக்கு விமான சேவைகளை லுஃப்தான்ஸா ரத்து செய்கிறது. விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் காரணமாக 4000 விமான சேவைகள் ரத்தாவதால் பரந்துபட்ட அளவில் பயணத்தடைகள் பெருமளவுக்கு பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிலி நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை, அவசரநிலை பிரகடனம்
சிலி: சிலியில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு வடக்குப் பிராந்தியங்கள் பேரழிவு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கே சுரங்கப் பகுதிகள் நிறைந்த இக்குய்கியூ பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
காத்தான்குடி புதிய மத்தியஸ்தர்கள் சபையின் 2014 ஆண்டுக்கான காலாண்டு ஒன்று கூடல் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நீதி அமைச்சின் கீழ் இயங்கும் காத்தான்குடி புதிய மத்தியஸ்தர்கள் சபையின் 2014 ஆண்டுக்கான காலாண்டு ஒன்று கூடல் நிகழ்வு கடந்த வாரம் 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஆ.ம. ஹாஜியார் வளாகத்தில் மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையில் இடம்பெற்றது.
-
கிண்ணியா நகரசபை நடத்திய பூச்சாடி தெரிவுப் போட்டி
(ரைஸ்) கிண்ணியா:கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக நகரசபை நடத்திய பூச்சாடி அழகுத் தெரிவுப் போட்டி நகரபிதா தலைமையில் நேற்று நகரசபையில் இடம்பெற்றது.
-
தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளராகவும்,கட்சியின் சிரேஷ்ட சட்ட ஆலோசகராகவும் சட்டத்தரணி A.A. முஹமட் றூபி அமைச்சர் அதாவுள்ளாஹ் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-டீன் பைரூஸ்- அக்கரைப்பற்று: மகாண சபைகள் உள்ளுராட்சசி அமைச்சரும் தேசிய சாங்கிரஸின் தேசிய தலைவருமான கௌரவ ALM. அதாவுள்ளாஹ் அவர்களின் தலைமையில் 2014.03.30ம் திகதி காலை அக்கரைப்பற்று அதாவுள்ளாஹ் அரங்கில் தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு நடைபெற்றது.