-டீன் பைரூஸ்-
அக்கரைப்பற்று: மகாண சபைகள் உள்ளுராட்சசி அமைச்சரும் தேசிய சாங்கிரஸின் தேசிய தலைவருமான கௌரவ ALM. அதாவுள்ளாஹ் அவர்களின் தலைமையில் 2014.03.30ம் திகதி காலை அக்கரைப்பற்று அதாவுள்ளாஹ் அரங்கில் தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தேசிய காங்கிரஸின் பேராளர்கள்; கலந்து பொண்டனர்.இதில் விஷேட அம்சமாக இடம்பெற்ற உத்தியோகஸ்தர்கள் தெரிவின் போது காத்தான்குடி நகர சபையின் முன்னால் உறுப்பினரும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் இணைப்பாளருமான சட்டத்தரணி A.A. முஹமட் றூபி அவர்கள் தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளரும், கட்சியின் சிரேஷ்ட சட்ட ஆலோசகராகவும் அமைச்சர் அதாவுள்ளாஹ் அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
அந்நிகழ்வில் தேசிய காங்கிஸின் பிரதித் தலைவரும் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இயங்கும் இலங்கை துதுவராளயத்தின் உயர்ஸ்தானிகர் டாக்டர் M.A. உதுமாலெவ்வை அவர்களும் கிழக்கு மாகாணசபையின் வீதி அபிவிருத்தி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான MS உதுமாலெவ்வை அவர்களும் அன்மையில் தேசிய காங்கிரஸில் புதிதாக இணைந்து கொண்ட கல்முனை மாநகர சபையின் முன்னால் மநகரசபை மேயர் சிராஸ மீராசாஹிபு அவர்களும் உட்பட பெருந்தொகையான சிங்கள முஸ்லீம் பேராளர்களும் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment