டாக்கா: கிரிக்கட் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பித்த 1974 மற்றும் அதன் பின்னரான 1980களில் கிரிக்கட் வரலாற்றில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள்தான் மேற்கிந்தியத் தீவுகள்அணி. மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி பெற குறிப்பாக ஆசிய அணிகள் அன்று பல வருடங்கள் காத்திருந்ததும் வரலாறு.
நாளை இடம்பெற இருக்கும் உலக இருபது20 தொடரின் முதலாவது அரை இறுதிப்போட்டி உள்ளுர் நேரப்படி இரவு 7 மணிக்கு இடம்பெற இருக்கின்றது. தனது பலத்தை சாதித்து தாங்கள்தான் ஜாம்பவான்கள் என இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தாங்கள் இறுதியாக விளையாடிய போட்டிகளில் நிரூபித்திருந்தன.
எனினும் தோல்வி நிச்சயமே என எதிர்பார்த்து களமிறங்கிய இலங்கை அணியின் அபார பந்து வீச்சால் நியூசிலாந்து அணியை த்ரில் வெற்றி பெற்று தற்பொழுது அரை இறுதிப்போட்டியில் விளையாட காத்திருக்கின்றது இலங்கை அணி.
கடந்த 2012 உலக இருபது20 இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதி இருந்ததுடன், சொந்த மண்ணில் இலங்கை ,மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவி இருந்ததும் ஞாபகமிருக்கலாம்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் வேகப் பந்துகளுக்கு மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடுபவர்கள் எனும் பழைய புராணம் இருந்து வந்தது. எனினும் தற்போதைய வீரர்கள் சகல பந்துகளுக்கும் திறமையாக பதிலளிக்கக்கூடியவர்கள் என்பதை கடந்த போட்டிகளில் காண முடிந்தது.
இலங்கை அணி என்னதான் தனது சுழல் பந்தையும் களத்தடுப்பையும் நம்பி இருந்தாலும், துடுப்பாட்டத்தில் சிறப்பிக்காமல் போனால் தனது இறுதிப் போட்டி வாய்ப்பை இலங்கை நழுவ விட வேண்டிய நிலை ஏற்படும்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெறுவதும், முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்வதும் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பாக அமையும். முதலில் துடுப்பெடுத்தாடும் அணி 150 ஓட்டங்களுக்கு மேல் பெறுமிடத்து, வெற்றி வாய்ப்பை உறுதி செய்யக்கூயெதாக அமையும்.
எனவே இருபது20 போட்டிகள் எச்சந்தர்ப்பத்திலும் திடீர் மாற்றம் அடையும் வாய்ப்புள்ளதால் பலம் பொருந்திய இரு அணிகள் மோதும் நாளைய அரை இறுதிப்போட்டி நிச்சயம் இறுதிவரை ஓர் விறுவிறுப்பைத் தரும் என்பதை எதிர்பார்க்கலாம்.
Published by



Leave a comment