(ரைஸ்)
கிண்ணியா:கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக நகரசபை நடத்திய பூச்சாடி அழகுத் தெரிவுப் போட்டி நகரபிதா தலைமையில் நேற்று நகரசபையில் இடம்பெற்றது.
பொது மக்கள், நகரசபை ஊழியர்களுக்கு இடையில் பொது அறிவித்தல் மூலம் இப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிக்காக சுமார் 250 இற்கும் மேற்பட்ட பூச்சாடிகள் போட்டிக்கென கொண்டுவரப்பட்டிருந்தது.வெற்றி பெற்ற பூச்சாடி உரிமையாளர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த போட்டியானது பொதுவான நடுவர்களைக் கொண்டே தெரிவுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பரிசில்களை நடுவர்கள் நகரபிதா முன்னிலையில் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வுக்கு கிண்ணியா உதவி பிரதேச செயலாளர் யு. அஜிதா, வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சேகு அலி, கிண்ணியா தளவைத்தியசாலை டி.எம்.ஓ டொக்டர் ஏ.எச். சமீம், கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எச்.எல்.ஏ. ரணசிங்க, நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், கிண்ணியா ஜம்இயதுல் உலமாசபைத் தலைவர் ஏ.எம். ஹிதாயதுள்ளாஹ் மற்றும் நகரசபை உத்தியோகத்தகர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Published by







Leave a comment