வீட்டுப் பண்ணையாளர்களுக்கான ஒரு மாத காலம் பூர்த்தியான நாட்டுக் கோழிக்குஞ்சுகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது

unnamed (2)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான இல்மி அஹமட் லெவ்வை அவர்களினால் இன்று (02.04.2014) காலை 9.30 மணியளவில் காத்தான்குடி செஞ்சிலுவைச்சங்க மண்டபத்தில் – வீட்டுப் பண்ணையாளர்களுக்கான ஒரு மாத காலம் பூர்த்தியான நாட்டுக் கோழிக்குஞ்சுகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது.

கௌரவ கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அல்ஹாஜ் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களது வழிகாட்டலின்கீழ் காத்தான்குடி கால்நடை வைத்திய சாலையுடன் இணைந்து மேற்படி நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வை, கால் நடைவைத்திய அதிகாரி திருமதி. சாகலசூரிய, கிராம உத்தியோகத்தர் MLM. அஸீஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.கோவேந்திரன், SM. முபஸ்ஸிர், MIM. சலீம் OSA அமைப்பின் பொருளாளர்- அல்ஹாஜ் MMM. தாஹிர், மௌலவி MHM. பைறூஸ் (பலாஹி), மௌலவி இல்யாஸ் (பலாஹி), சித்த வைத்தியர் AL. அலி அக்பர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment