டாக்கா:இருபது20 உலகக் கிண்ணத்தொடரில் குறைந்தது அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பறிகொடுத்தது. பாகிஸ்தான் அணி 2007ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வி கண்டாலும், 2009ம் ஆண்டு சம்பியன் ஆனது.
2010, 2012ம் ஆண்டு உலக கிண்ணத்தொடரின் அரையிறுதியில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி இந்த உலகக் கிண்ணத்தொடரில் முதன்முறையாக சூப்பர்10 சுற்றோடு வெளியேறி தான் தக்க வைத்திருந்த அரையிறுதிப் பெருமையை இழந்துள்ளது.
T20 உலகக் கிண்ண சர்வதேச கிரிக்கெட்டில் 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கெதிராக 74 ஓட்டங்கள் என்பதே இந்த நாள் வரை பாகிஸ்தானின் மோசமான ஓட்டமாக இருந்து வருகிறது. 82 ஓட்டங்கள் என்பது 2வது குறைந்த பட்ச ஓட்டமாக கருதப்படுகிறது.
மேற்கிந்திய அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஓட்டங்கள் 82 என்ற அளவில் இருக்கும் போது, மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 82 ஓட்டங்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு T20 உலகக் கிண்ணத் தொடர் கிரிக்கெட்டில் இது சிறந்த வெற்றியாக அமைந்ததுள்ளது.
Published by

Leave a comment