மலேசிய விமானம் மாயமான காரணம் தெரியாமலேயே போகலாம்: மலேசிய பொலிஸ் அதிகாரி

 malaysian planeS-90

கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமானதற்கான காரணம் தெரியாமலேயே போகலாம் என்று மலேசியா எச்சரித்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி மாயமாகி இந்திய பெருங்கடலுக்குள் விழுந்துவிட்டதாகக் கூறப்படும் மலேசிய விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

விமானத்தை தேடும் பணியில் 10 விமானங்கள், 10 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து மலேசிய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மலேசிய விமானம் குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும். சிறு விஷயங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

விசாரணையின் முடிவில் விமானம் மாயமானதற்கான உண்மை காரணம் தெரியாமலேயே போய்விடலாம். விமானத்தை பயணிகள் யாரும் கடத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பயணிகள் யாருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மனநிலை பாதிப்பு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது என்றார்.

Published by

Leave a comment