Author: yourkattankudy.com
-
சாதாரண பயணியாக ஜனாதிபதி லண்டன் பயணம்
கொழும்பு: பிரித்தானியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணமானார். நேற்றுக் காலை 9.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஈகே 651 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் டுபாய் ஊடாக லண்டன் நோக்கி ஜனாதிபதி பயணமாகியுள்ளார்.
-
“காணாமல்போன எம்எச்370 விமானம் கண்டுபிடிக்கப்படும்”
கோலாலம்பூர்: காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சிற்குச் சொந்தமான எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
-
சிரியா சென்ற பிரிட்டிஷ் சிறுமிகள்: காவல்துறை மீது விமர்சனம்
லண்டன்: இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுடன் சேர்வதற்காக சிரியாவுக்குச் சென்றதாக நம்பப்படும் பிரிட்டிஷ் பள்ளிச்சிறுமிகள் மூவரையும், அவர்கள் காணாமல்போவதற்கு முன்னரே நேரடியாக தொடர்புகொள்ளத் தவறியமைக்காக காவல்துறையை அந்த சிறுமிகளின் உறவினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
-
உடைக்கப்பட கட்டடம் சம்பந்தமாக அத்தமுனை பள்ளிவாயலின் தலைவர் வஹாப்தீனின் நேர்காணல் வீடியோ
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் பொலன்னறுவை: பள்ளிவாயல் எனும் கட்டடம் கட்டப்படுவதற்கு காரணமாய் இருந்த அத்தமுனை பள்ளிவாயலின் தலைவர் வஹாப்தீனை சந்தித்து இது சம்பந்தமாக வினவிய போது,
-
‘பெண்கள் வலுப்படல், மனிதம் வலுப்படல்’ :மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்
அப்துல் அஸீஸ் மட்டக்களப்பு: இன்று சர்வதேச மகளிர் தினத்தினை அனைவர்களும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். பெண்களின் வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் கௌரவமாக நடாத்தப்பட வேண்டுமென சர்வதேச சட்டங்கள் எடுத்துரைக்கிறது.
-
மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் வழங்கல் பிரச்சினைகள் சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்
ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமுகமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸூக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
-
சிங்கள – முஸ்லிம் உறவைக் காக்க கட்டிடத்தை உடைத்த முஸ்லிம்கள்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் பொலன்னறுவை: போகஹதம கிராமமானது பொலன்னறுவை மாவட்டத்தில் மின்னேரிய செயலாளர் பிரிவில் இல.40 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள கிராமமாகும். சுமார் 28குடும்பங்கள் வாழ்ந்து வரும் இக்கிராமத்துக்கு அண்டிய 2 கிலோ மீற்றர் தூரத்தில் ஜும்மா பள்ளிவாயலுடனான அத்தமுன எனும் கிராமமும் அமைந்துள்ளது. ஆனால் போகஹதமன கிராமத்தினை முற்றிலும் சூழ்ந்ததாக சிங்கள குடியிருப்புக்களே காணப்படுகின்றது.
-
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் பந்து வீசத் தீர்மானம்
அவ்க்லண்ட்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 29 வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் நியூசிலாந்தின் அவ்க்லண்ட், ஈடன் பார்க் மைதானத்தில் இன்று மோதுகின்றன.
-
“தனிக்காட்டு ராஜா” அரசியலும் காத்தான்குடி சமூகமும்…
– ஏ. அப்துல் ஹமீட் காத்தான்குடி: காத்தான்குடியில் ஓலைக்குடிசையில் போடப்பட்ட தீப்பந்தத்தைப் போல் இஸ்லாமிய கொள்கையை எரித்துவருகிறது சிலை விவகாரம். “சிலை என்ன காத்தான்குடிக்குப் புதிதா?” என கேட்கும் அளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வும் அவரது ஆதரவாளர்களும் துணிந்துவிட்டனர்.
-
“அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால் இலங்கை அணியின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்”: ஜயசூரிய
சிட்னி: உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால் இலங்கை அணியின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.நாளை 8ஆம் திகதி சிட்னியில் நடக்கும் போட்டியில் இலங்கை அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
-
அருங்காட்சியத்தின் விலைமதிப்பற்ற பொருட்களை களவாடிவிட்டு, வெறும் சிலைகளை இஸ்லாம் என்ற பேரில் உடைத்தழிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்
மொசூல்: இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) தீவிரவாதிகள் ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகில் இருக்கும் 3000 ஆண்டுகள் பழைமையான ஆசிரியன் நகரை புல்டோசர் கொண்டு தகர்க்க ஆரம்பித்திருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
-
காலிறுதியில் நுழைந்தது இந்தியா
சிட்னி: கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் நேற்று நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இருந்தபோதும், பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியாத மேற்கிந்தியத் தீவுகள் அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.