காலிறுதியில் நுழைந்தது இந்தியா

indiaசிட்னி: கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் நேற்று நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இருந்தபோதும், பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியாத மேற்கிந்தியத் தீவுகள் அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

183 என்ற எளிதான துவக்கத்துடன் தனது ஆட்டத்தைத் துவங்கிய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 114 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்தது.ஆனால், அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியும் அஸ்வினும் பொறுமையுடன் ஆடி, இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றனர்.

ஆட்ட முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்து இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்றிருக்கும் இந்திய அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

india

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி அதிகபட்சமாக 45 ரன்களைக் குவித்தார். ஷமி 35 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹோல்டர் அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார். டெய்லர், ரஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இந்திய அணி அடுத்ததாக மார்ச் 10ஆம் தேதியன்று அயர்லாந்து அணியுடன் நியூசிலாந்தின் ஹமில்டனில் மோதுகிறது.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்றைய தோல்வியின் மூலம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

இன்று இடம்பெற இருக்கும் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெரும் அணி காலிறுதிக்கு நேரகாலத்தோடு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment