சிட்னி: உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால் இலங்கை அணியின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.நாளை 8ஆம் திகதி சிட்னியில் நடக்கும் போட்டியில் இலங்கை அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இது தொடர்பாக இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவுடனான மோதல் மிக முக்கியமானது. அந்த அணியை வீழ்த்தும் பட்சத்தில் இலங்கை வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இலங்கை அணியில் நல்ல மாற்றம் தெரிகிறது. பங்களாதேஸூக்கு எதிரான போட்டியில் சங்கக்காரா, டில்சானும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டில்சான், திரிமான்னவும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
இலங்கை அணியில் துடுப்பாட்டம் வலுவாக இருக்கிறது. அதே போல பந்துவீச்சில் மலிங்க, திசர பேரேரா சோபிக்க ஆரம்பித்துள்ளனர். நாங்கள் சரியான பாதையை நோக்கி பயணிக்கிறோம் என்றும் ஜயசூரிய கூறியுள்ளார்.
Published by

Leave a comment