லண்டன்: இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுடன் சேர்வதற்காக சிரியாவுக்குச் சென்றதாக நம்பப்படும் பிரிட்டிஷ் பள்ளிச்சிறுமிகள் மூவரையும், அவர்கள் காணாமல்போவதற்கு முன்னரே நேரடியாக தொடர்புகொள்ளத் தவறியமைக்காக காவல்துறையை அந்த சிறுமிகளின் உறவினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஏற்கனவே சிரியாவுக்குச் சென்றிருந்த சிறுமி ஒருத்தியைப் பற்றி அறிந்துகொள்வதற்காக, குறித்த சிறுமிகள் மூவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸார் பெற்றோரிடம் அனுமதி கேட்டு எழுதியிருந்தனர்.
அந்தக் கடிதங்களை அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பாமல், அந்தச் சிறுமிகளின் கைளிலேயே பொலிஸார் கொடுத்துள்ளனர்.அந்தக் கடிதங்களை அந்தச் சிறுமிகளும் மறைத்துள்ளனர்.
ஆனால், அந்தச் சிறுமிகள் நாட்டைவிட்டு வெளியேறவுள்ளார்கள் என்பதற்கான எந்தவிதமான சமிக்ஞைகளும் வெளிப்பட்டிருக்கவில்லை என்றே புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
Published by

Leave a comment