மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் வழங்கல் பிரச்சினைகள் சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்

unnamedஹாசிப் யாஸீன்

கல்முனை: கல்முனை பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமுகமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸூக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைவாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் ஐ.எல். கைதர் அலி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிரதேச பொறியியலாளர் எஸ். சதீஸ், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனைக் காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம்.எம். முனவ்வர், பொறியியலாளர் ஜே.எம். ஜௌசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனைக்குடி, இஸ்லாமாபாத், சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, மருதமுனை, தமிழ் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் வழங்கல் பிரச்சினைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டு இதற்கான தீர்வாக கல்முனைக்குடியிலும், இஸ்லாமாபாத்திலும் தனியான நீர்தாங்கி நிர்மாணிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இதனை நிர்மாணிப்பதற்கான இடத்தினை இனங்காணும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கல்முனைக்குடி கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

unnamed1

unnamed

Published by

Leave a comment