அருங்காட்சியத்தின் விலைமதிப்பற்ற பொருட்களை களவாடிவிட்டு, வெறும் சிலைகளை இஸ்லாம் என்ற பேரில் உடைத்தழிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

isisமொசூல்: இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) தீவிரவாதிகள் ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகில் இருக்கும் 3000 ஆண்டுகள் பழைமையான ஆசிரியன் நகரை புல்டோசர் கொண்டு தகர்க்க ஆரம்பித்திருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

ஐ.எஸ். குழு மொசூல் அருங்காட்சியத்தில் இருக்கும் பண்டைய கலைப்பொருட்களை தகர்க்கும் வீடியோவை வெளியிட்டு ஒரு வாரத்திற்குள்ளேயே நிம்ரூத் தலத்தில் இந்த அழிவை மேற்கொள்ள தயாராகி உள்ளது. “பட்டப்பகலில் புல்டோசர் ஒன்றுடன் வந்த அவர்கள் மாளிகையை தகர்க்க ஆரம்பித்தார்கள்” என்று மொசூல் நகர தொல்பொருட்கள் தொடர்பான அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்னசிர்பால் மாளிகையின் வாயில் களில் இருக்கும் இமாசு என்று அழைக்கப்படும் சிற்பங்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக அந்த பெண் அதிகாரி குறிப்பிட்டார். மொசூல் நகரில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் குறித்த இடத்தில் சேதமாக்கப்பட்டிருக்கும் தொல்பொருட்கள் குறித்த விபரங்கள் உறுதியாகவில்லை.

கடந்த வாரம் ஐ.எஸ். வெளியிட்ட வீடியோவில், அகழ்வு இயந்திரங்களை பயன்படுத்தி நின்வேயில் இருக்கும் பண்டைய கலைப்படைப்புகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.

“ஈராக்கிய பாரம்பரியத்தின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு பயங்கர தாக்குதல்” என்று ஐ.நாவின் காலாசார அமைப்பின் ஈராக்கிற்கான இயக்குனர் அலக்ஸ் பிளெதே குறிப்பிட்டுள்ளார். “அவர் எமது வரலாற்றை அழித்து வருகிறார்கள்” என்று ஈராக் தொல்பொருள் ஆய்வாளர் லாமியா அல் nஜய்லானி தொரிவித்தார்.

பண்டைய கல்லறைகள் மற்றும் சிலைகள் விக்கிரக வணக்கத்திற்குரியது என்று கூறியே ஐ.எஸ். அவைகளை அழித்து வருகிறது. கி.மு. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிம்ரூத் நகரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய கலைப்படைப்புகள் பக்தாத் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பொரும்பாலான தொல்பொருட்கள் குறித்த பகுதிகளிலேயே பாதுகாக்கப்பட்டு வந்தன.

isis

பெரும் பகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இந்த நிம்ரூத் தொல்பொருள் தலம் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உள்ளுர் பழங்குடியினர் ராய்ட்டருக்கு குறிப்பிடும்போது, “இஸ்லாமிய தேசம் உறுப்பினர்கள் நிம்ரூத் தொல்பொருள் தலத்திற்கு வந்து பெறுமதியானவற்றை களவாடிச் சென்றனர். அதற்குப் பின்னர் அந்த தலத்தை தரைமட்டமாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

நிம்ரூத்தில் இருக்கும் மாளிகை ஈராக், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய பகுதிகளை ஆண்ட இரண்டாவது அர்னசிர்பால் மன்னருடையதாகும். இந்த மாளிகையை கட்டுவதற்காக தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து விலைமதிப்பற்ற மரம், பளிங்கு மற்றும் பிற பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இங்கு அதிகமான அகழ்வு ஆராய்ச்சி யில் ஈடுபட்ட பிரிட்டன் பல பண்டைய பொருட்களையும் பிரிட்டனுக்கு எடுத்துச் சென்றனர். 1980களில் ஈராக் தொல்பொருள் ஆய்வாளர் முஸைம் மஹ்மூத் ஒரு அரச கல்லறையை கண்டுபிடித்தார். இது கடந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இதன்போது ஆசிரியன் மகாராணியின் நூற்றுக்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் டைக்ரிஸ் நதியின் கரையில் அமைந்திருக்கும் நிம்ரூத் நகரம் மிகப் பழமையானது. ஆசிரியன் காலத்தின் நடுப்பகுதியில், அதாவது கி.மு. 1,600ல் இந்த நகரத்திற்கு கல்ஹ{ என்று பெயர். பழைய ஏற்பாட்டில் கலா என்று குறிப்பிடப்படும் பகுதி இதுவாகும்.

மெசபடோமியாவின் வடபகுதியிலிருந்து ஆசிரியர்களின் ஆதிக்கம் இருந்தது. தற்போதைய ஈராக், சிரியா, துருக்கி நாடுகளில் சில பகுதிகளை உள்ளடக்கிய இடம் இது. 150 ஆண்டுகளாக நிம்ரூத் அசிரியாவின் தலைநகராக இருந்து, பின்னர் வீழ்ச்சியைச் சந்தித்தது.

1840களில்தான் முதன் முறையாக இப் பகுதியில் ஐரோப்பியர்களால் அகழ்வா ராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முழு அரண் மனைகள், சிலைகள், சிறிய அளவிலான கலைப்பொருட்கள் இங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்டன.

பின்னர், பல ஆண்டுகளுக்கு அகழ் வாராய்ச்சி ஏதும் நடக்கவில்லை. 1949இல் சர் மாக்ஸ் மல்லோவன் (எழுத்தாளர் அகாதா கிறிஸ்டியின் கணவர்) என்பவர், புதிதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.

‘நிம்ரூத் அண்ட் இட்ஸ் ரிமைன்ஸ்’ என்ற பெயரில் இது குறித்து புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார்.

பின்னர், பிற அகழ்வாராய்ச்சியாளர்களும் பணிகளைத் தொடர்ந்து செய்தனர். குறிப்பாக 1970களில் அந்தப் பகுதியில் இருக்கும் பிற கலைப்பொருட்கள், மிகப் பெரிய அளவில் புகைப்படங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. அவற்றில் பல தற்போது அழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்
படுகிறது.

அருங்காட்சியங்களில் இருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களை களவாடிவிட்டு, இஸ்லாம் என்ற பேரில் சிலைகளை உடைக்கும் புதிய யுக்தியை தற்பொழுது ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் எண்ணெய்க் கினறுகளைக் களவாடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததால், உலகிலேயே பணக்கார பயங்கரவாத இயக்கமாக ஐ.எஸ், வரலாற்றில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment