மட்டக்களப்பு: இன்று சர்வதேச மகளிர் தினத்தினை அனைவர்களும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். பெண்களின் வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் கௌரவமாக நடாத்தப்பட வேண்டுமென சர்வதேச சட்டங்கள் எடுத்துரைக்கிறது.
இன்று அனேகமான பெண்கள், பெண்களாகப் பிறந்ததன்றி, வேறு காரணம் எதுவுமின்றியே அடிப்படை மனித உரிமைகள் அற்றவர்களாக வாழ்வை அனுபவித்து வருகின்றனர். ‘சாதி ஒன்றுதான், ஆண் பெண் தன்மை, இரண்டுதான்’ என்பார்கள். மனித உரிமைகள் வரலாற்றினை புரட்டிப்பார்த்தால், ஒட்டு மொத்தமாக பெண்ணினம் அலட்சியப்படுத்தப்பட்டு வந்திருப்பதை நாம் அறிகிறோம். ஆகவே பெண்ணினது உரிமையும் மனித உரிமையே என்பதால் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பங்கு பற்றி நாம் அக்கறை கொள்வதோடு, அவர்களின் முன்னேற்றத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடற்பாடு அனைவருக்கும் உண்டு.
பெண்கள் வலுப்படல்
உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி பெண்களின் எண்ணி;க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லாவிதங்களிலும் ஆண்களைப் போலவே அறிவாற்றல்மிக்கவர்களாக, சிறந்த நிருவாகிகளாக, ஆராய்ச்சியாளர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் இன்று தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
சர்வதேச பெண்கள் தினம் என்றால் என்ன?
1789 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமை பெற வேண்டும் என்றும் வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண் அடிமைத்தன விடுதலை என்ற கோரிக்கைகளை முன் வைத்து பாரிஸ் நகர தெருக்களில் பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அந்நாட்டு அரசன் ‘இவர்களை அதிகாரம் கொண்டு அடக்குவேன்’ என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என்றும் மிரட்டினான். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் இதில் கலந்து கொண்டனர். அரச மாளிகையை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் சென்றது. அரசனின் மெய்ப்பாதுகாப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை மிரட்டிய போது, மெய்ப்பாதுகாவலர் இருவரை கூட்டத்தினர் திடீரென்று தாக்கி;க் கொன்றனர். இதனை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன் எனவும் உங்களுக்கு சாதகமாக அறிவிப்பேன் என்றும் சமாதானப்படுத்தினான். இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.
இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளிலும், ஜேர்மனி, இத்தாலியிலும் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தார். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதி. இந்த நாள்தான் சர்வதேச பெண்கள் தினமாக நினைவு கூறப்படுகிறது.
எமது நாட்டின் அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு முக்கியம் பெற்றிருந்தாலும், அதற்கான சமூக அங்கீகாரமும், சமத்துவமான நடத்துகையும், போதிய ஓய்வும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பெண்களுக்கான உரிமை இல்லாதவிடத்தில் மனித உரிமைகள் இருக்க முடியாது. சீதனக் கொடுமையென்றும், மணமுடித்த கணவன் அநாதரவாய் விட்டுச் சென்றுள்ளானெனவும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும் நாம் கவனஞ்செலுத்த வேண்டும்.
ஏனெனில் தெற்காசியாவில் வாழும் ஒவ்வொரு இரண்டு பெண்களிலும் ஒருவர் தனது நாளாந்த வாழ்க்கையில் வன்முறைக்கு முகங் கொடுப்பதாக புள்ளி விபரங்கள் பெண்கள் விடயத்தில் சமுகத்தின் கடற்பாடுகள் என்ன?
பெண்களின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள்
வன்முறையை அனுபவிக்கும் ஒரு பெண்ணை மௌனமாக்கி சமுகத்தில் ஒதுக்காமல் அப்பெண்ணுக்கு, பெண்களுக்கு ஏற்படுகின்ற இல்லத்து வன்முறைகளை இல்லாதொழிக்க எவ்வழியிலேனும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
பெண்களின் உழைப்புக்கேற்றாற்போல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
பெண்கள் ஒழுக்கமான அரசியலில் பிரவேசிப்பதை அங்கீகரிப்பதோடு, அவர்களின் கருத்துக்களை பல்வேறு மட்டங்களில் பரப்புவதற்கு வழிவகுத்துக் கொடுக்க வேண்டும்.
பெண்களின் தனித்துவமான தேவைகள், வசதிகளை முன்னுரிமைப்படுத்தப்படல் வேண்டும்.
விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட குடும்பப் பெண்ணொருத்தி எதிர் நோக்கும் பிரச்சினைக்கான காரணிகள் இலங்கை மற்றும் ஏனைய வளர்முக நாடுகளில் குடும்பப் பிரச்சினையானது நான்கு அடிப்படைக் காரணிகளைக் கொண்டு நடைபெறுகிறது.
கணவன், மனைவி இருவருக்கிடையே பொருளாதார சமமின்மையினால் என்றுமே கணவனின் பொருளாதாரத்தில் மனைவி தங்கியிருத்தல்.
தீர்மானம் எடுக்கின்ற அதிகாரத்தை ஆண்கள் கொண்டிருப்பதால் பெண்களின் கருத்துக்களை உள்வாங்காமை.
குடும்பப் பெண்ணுக்கு உடலியல் வன்முறைகள் பயன்படுத்தப்படும் முறைமையினால் முரண்பாடு ஏற்படுகிறது.
சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண் ஆதிக்க செயற்பாடுகளினால் உளரீதியாக பெண்கள் பாதிக்கப்படல்.
குடும்பப் பிரச்சினைகளைக் குறைக்கும் காரணிகள்
குடும்பப் பிரச்சினைக்கு எதிரான விடயங்களில் சமூகம் முனைப்புடன் பங்குகொள்ளல்.
வீட்டிற்கு வெளியே உள்ள பெண்களின் சக்தியும் ஆண்களின் ஒத்துழைப்பும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு புகலிடம் வழங்கக்கூடிய நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் காப்பகங்களின் உதவிகள்.
பெண்களுக்கிடையிலான வலையமைப்பு அல்லது ஒன்றுகூடல் அமைப்புக்களின் காத்திரமான செயற்பாடுகள்.
பிரச்சினைகளைத் தாங்கிக் கொண்டு பெண்கள் வாழக் காரணம்
எத்தகைய பிரச்சனையென்றாலும் இச் சமூகம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துவா என்ற மனப்பாங்கு.
பொருத்தமான புகலிடம் இருப்பினும் அவற்றுக்குச் செல்ல பயம், அல்லது அங்குள்ள இடப் பற்றாக்குறை.
மற்றைய குடும்பங்களும் அல்லது பெண்கள் நிறுவனங்களும் இவ்வாறான பிரச்சினை எற்பட்ட பெண்ணை ஏற்க மறுத்தல்.
பிள்ளைகளின் கௌரவத்தினைக் கருத்திற் கொண்டு தனது வாழ்க்கையை சகிப்புத்தன்மையுடன் வாழப் பழகிக் கொண்டமை.
எனவே பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான வசதிகளையும் ஒத்துழைப்புக்களையும் மனிதப் பிறவினர் அனைவர்களும் செய்ய வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.
Published by
![womens-day[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/womens-day1.jpg?w=134&h=150)
Leave a comment