Author: yourkattankudy.com
-
இந்திய வீட்டுத் திட்டம்: பயனாளிப் பெண்ணிடம் பாலியல் சலுகை கோரியதாக புகார்
கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளியான பெண் ஒருவரிடம் அதிகாரி ஒருவர் பாலியல் சலுகை கோரியதாகக் கூறப்படும் விடயத்தில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று 11 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி-01 இமாஸா ஹாட்வெயாருக்கு அருகாமையில் அமைந்துள்ள திறந்த கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.
-
கொழும்பு பாபர் வீதி கோவில் தேர் விவகாரம், சுமுகமான தீர்வு காணப்பட்டது – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
கொழும்பு: கடந்த ஒரு சில நாட்களாக கொழும்பு பாபர் வீதியில் அமைந்துள்ள கோயிலில் தேர் எடுத்தல் தொடர்பான சர்ச்சைக்குறிய செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. ஒரு சில முஸ்லிம் தீவிரவாதப் போக்குடையவர்கள் குறித்த கோவிலில் தேர் எடுப்பதற்கு தடை விதிப்பதாகவும், கோவில் நிர்வாகிகளை அச்சுறுத்துவதாகவும், அதனால் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி நிச்சயக்கப்பட்டிருந்த தேர்த் திருவிழாவினை நடத்த முடியாமல் போனமை குறித்தே இந்த சர்ச்சை நிலவியது.
-
ஏறாவூர் -சவுக்கடி கடலில் ஒரு கோடி ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபட்டன
ஏறாவூர்: ஏறாவூர் -சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரை (இழுவை) வலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு மஞ்சற்பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து ஒத்திகை வெற்றியளிக்கவில்லை?
கொழும்பு: இன்று (12) காலை இராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய போக்குவரத்து திட்டமொன்றிற்கான ஒத்திகை ஒன்று, நேற்று (11) மற்றும் நேற்று முன்தினம் (10) நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
மட்டக்களப்பு ரயில் சேவை இன்று முதல் மாற்றம்
மட்டக்களப்பு: இலங்கை ரயில் சேவையின் மற்றுமொரு முக்கிய ரயில் நிலையமான மட்டக்களப்பு ரயில் நிலைய சேவைகளின் நேரங்கள், இன்று (12) முதல் மாற்றமடைவதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். அலீபா தெரிவித்துள்ளார். அதன்படி மட்டக்களப்பிலிருந்து காலை 7.30 இற்கு புறப்பட்ட உதயதேவி காலை 6.10 இற்கு புறப்பட்டு பி.ப. 3.15 இற்கு கொழும்பு கோட்டையை அடையும்.
-
காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு- போக்குவரத்து அமைச்சர் நிமால் விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 11 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று 11 ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயம் செய்தார்.
-
ஞானசாரவை கைது செய்யுமாறு உத்தரவு
கொழும்பு: நீதிமன்றில் ஆஜராகாத பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
-
பிள்ளையான் கைது செய்யப்பட்டது ஏன்?
கொழும்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
பாபர் வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முஸ்லிம்கள் நிறுத்தினார்களா..?
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு: கொழும்பு 13, பாபர் வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முஸ்லிம்கள் நிறுத்த முற்படுவதாக கூறப்படுவது வெறும் வதந்தியாகும். ஒருசிலரின் செயற்பாடுகளைவைத்து நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பில் தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தப்படுகின்றது. சமய நிகழ்வுகளை தடை செய்வதற்கோ அதற்கு இடையூறு விளைவிப்பதற்கோ நாம் சந்தர்பமளிக்கப்போவதில்லை என தெரிவித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரான அமைப்பாளுமான முஜிபுர் ரஹ்மான் இது குறித்து யாரும் அச்சம் கொள்ளத்…
-
இறக்காமத்தை கவனிப்பாரா சுகாதார பிரதியமைச்சர்? – மக்கள் அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் காலக்கேடு…!
சப்னி இறக்காமம்: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கிடையில் புதிய நல்லாட்சிக்கான அரசு மிக நீண்ட காலமாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையிலுள்ள இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை அபிவிவருத்தி செய்ய வேணடுமென மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
-
கண் பார்வை குறைவுள்ள சுமார் 1000 வறிய மக்களுக்கு கண் பரிசோதனையுடன், இலவச மூக்குக்கண்ணாடி வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும், மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் 11 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.