போக்குவரத்து ஒத்திகை வெற்றியளிக்கவில்லை?

colombo trafficகொழும்பு: இன்று (12) காலை இராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய போக்குவரத்து திட்டமொன்றிற்கான ஒத்திகை ஒன்று, நேற்று (11) மற்றும் நேற்று முன்தினம் (10) நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட இப்போக்குவரத்து ஒத்தியை இராஜகிரிய மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் பரீட்சார்த்தமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

colombo traffic

சனி, ஞாயிறு தினங்களில் குறித்த ஒத்திகை வேளையில் எவ்வித பிரச்சினையும் காணப்படாத நிலையில் இன்றைய தினம் (12) காலை வேளையில் இந்த ஒத்திகை காரணமாக மிக நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை பதிவாகியிருந்தது.

சிலர் தங்களது அலுவலகத்திற்கு செல்ல, சுமார் ஒரு மணித்தியாலம் வரை எடுத்ததாக தெரிவித்திருந்தனர்.

Published by

Leave a comment