இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

seminar bcoகாத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று 11 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி-01 இமாஸா ஹாட்வெயாருக்கு அருகாமையில் அமைந்துள்ள திறந்த கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

இவ் அறிவூட்டல் கருத்தரங்கில் மாகாண இறைவரித் திணைக்களத்தின் வரி மதிப்பாளர் ஐ.எம்.றூமில் வரிவிதிப்பு தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

taxtax1

இதில் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்கள், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

seminar bco

உங்கள் வியாபார முன்னேற்றத்திற்கு வரி விதிப்பு ஒர் தடையா எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மேற்படி அறிவூட்டல் கருத்தரங்கில் வரி அறவிடும் நிறுவனங்கள்,வரிவிதிப்பு ,வரி அறவீடு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

seminar

Published by

Leave a comment