Author: yourkattankudy.com
-
சிறுவர்களின் பாதுகாப்பை பெரியவர்களே உறுதி செய்ய வேண்டும் பிரதி அமைச்சர் அமீர் அலி
எம்.ரீ.எம். பாரிஸ் கல்குடா: சிறுவர்களின் பாதுகாப்பை பெரியவர்களே உறுதி செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார். பிள்ளைகள் இறைவன் கொடுத்தவரமாகும் அந்தவரத்தை பேணிப்பாதுகாக்கும் உண்ணத பொறுப்பு பெரியர்களிடமே உள்ளது எனவே எமது செல்வங்களாகிய
-
குர்ஆனிய சிந்தனை என்ற தலைப்பிலமைந்த அல்குர்ஆன் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா
எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: உஸ்தாத் அஷ்-ஷெஹ் எம். ஏ.எம். மன்சூர் (நளீமி) யினால் எழுதப்பட்ட குர்ஆனிய சிந்தனை என்ற தலைப்பிலமைந்த அல்குர்ஆன் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 7.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் செயலாளர் ஏ.எம். சாதிக்கீன் தெரிவித்தார்.
-
தூக்கிலிடும் வேலைக்கு நேர்முகத்தேர்வு இடம்பெற்றது!
கொழும்பு: இலங்கையில் தூக்கு தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் வேலையை செய்வோரை தேர்ந்தெடுக்க நேற்று (13) நேர்முகத் தேர்வு நடந்தது. இந்த வேலைக்காக 24 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 14 பேர் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர் எனவும், நேர்முகப்பரீட்சையில் பெற்றுக்கொண்ட மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களில் இருவர் இன்னும் சில தினங்களுக்குள் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
நிந்தவூர் ஆதார வைத்திய சாலைக்கு பிரதியமைச்சர் பைஷால் காசீம் விஜயம்
சப்னி நிந்தவூர்: சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைஷால் காசீம் இன்று நிந்தவூர் ஆதாரத வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் பாலித்த மஹிப்பால அவர்களுடன் குழுவொன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
-
‘எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’
லண்டன்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் ரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று டச்சு (நெதர்லாந்து) பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது.
-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் தனிநபர் பிரேரனை..!
திருமலை: கிழக்கு மாகாண சபையின் சகல தரப்பினரது பங்கு பற்றுதலுடன் சென்ற கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் மாவட்டங்கள் தோறும், ‘கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்’ என்ற பெயரிலான கூட்டங்களை நடாத்தியதால் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மாவட்ட ரீதியில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காணக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது.
-
அட்டாளைச்சேனையில் மீனவர்களின் வலையில் சிக்கிய பாரை மீன்கள்
சப்னி அட்டாளைச்சேனை: அம்பாறை, அட்டாளைச்சேனை கடற்கரை பிரதேசத்தில் நேற்று (13) 8ஆம் பிரிவைச்சேர்ந்த அப்துல் றகுமான் ராஜா என்பவருக்கு சுமார் ரூபாய் 2,000 பெறுமதியான 4000க்கும் மேற்பட்ட பாரை மீன்களும், அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவைச்சேர்ந்த எஸ். ஆப்தீன் என்பவரின் கரை வலையில் சுமார் 2000 பாரை மீன்ககளும் பிடிபட்ட போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
-
சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியரின் உடல் இஸ்லாம் முறைப்படி அடக்கம்
டாக்கா: பங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் ஒருவரது உடல் இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. குனியோ கோஷி என்ற இந்த ஜப்பானியர் பங்களாதேஷின் வட பகுதியில் வசித்து வந்தார்.
-
பாலைவனத்தில் திசைதவறி எறும்புகளை உண்டு உயிர் தப்பிய அவுஸ்திரேலியர்
சிட்னி: ஆஸ்பாலைவனத்தில் திசைதவறி எறும்புகளை உண்டு உயிர் தப்பிய அவுஸ்திரேலியாவின் “அவுட்பேக்” என்ற பெரிய பாலைவனப் பிரதேசத்தில் வேட்டையாடச் சென்று ஆறு நாட்கள் காணாமல் போன பாலைவனத்தில் திசைதவறி எறும்புகளை உண்டு உயிர் தப்பிய அவுஸ்திரேலியர் ஒருவர், தான் எப்படி உணவோ அல்லது தண்ணீரோ இல்லாமல் , கறுப்பு எறும்புகளை மட்டும் உண்டு உயிர் தப்பினேன் என்பதை விவரித்திருக்கிறார்.
-
புத்தக வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர் முகத்தில் சிவசேனைக் கட்சியினர் கறுப்பு மை வீச்சு
மும்பை: மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின் முகத்தில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர். வலது சாரி ஹிந்து ஆதரவு கட்சியான சிவசேனைக் கட்சியினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறு,ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியைக் கோரி இந்த செயலில் ஈடுபட்டனர்.