ஏறாவூர் -சவுக்கடி கடலில் ஒரு கோடி ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபட்டன

fisha in eravurஏறாவூர்: ஏறாவூர் -சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரை (இழுவை) வலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு மஞ்சற்பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது இழுவை வலைகளிலே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வந்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகளவான மக்கள் சென்று பிடிபட்ட மீன்களை பார்த்து வருகின்றனர்.

fisha in eravur

fish eravur

Published by

Leave a comment