Author: yourkattankudy.com
-
மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும்: முபாறக் மதனியின் விஷேட உரை- ஒலிப்பதிவு
உரையைக் கேட்பதற்கு இங்கே சொடுக்குக (ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)
-
அளுத்கம பிரதேசத்தினை மீளக்கட்டியெழுப்பிய முப்படையினர், அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு
அளுத்கம: கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ நகரினை மீளக்கட்டியொழுப்பிய இராணுவ வீரர்கள், விமானப் படையினர், கடற் படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
“மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கானது காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் காத்திரமான பணிகளில் ஒன்றாகும்”
ஏ.எல். டீன்பைரூஸ், பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா இஸ்லாமியப் பணிகளில் ஒர் அங்கமாக மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான “மஸ்ஜித் நிர்வாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக மார்க்க பொறுப்புகளும்” எனும் தலைப்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கு காத்தான்குடி ஜம்இய்யாவின் தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல்காதர் (பலாஹி) தலைமையில் 10.10.2015 சனிக்கிழமை இஷா தொழுகையினை தொடர்ந்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
முகத்திரையால் தடைகளைத் தகர்த்து குடியுரிமை பெற்ற சாதனைப் பெண்!
டொரண்டோ: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஸூனேரா இஸ்ஹாக் (29) என்ற பெண் கடந்த 2008ம் ஆண்டு கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் குடியேறியுள்ளார்.கனடிய நாட்டு குடிமகள் ஆவதற்கு இஸ்லாமிய முகத்திரை (நிகாப்) தடையாக இருந்ததை எதிர்த்து இவர் நடத்திய தொடர் போராட்டங்களின் பலனாக தற்போது அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அவர் கனடிய நாட்டு குடிமகள் ஆவதற்கு தகுதியனவராகவும், குடியுரிமை ஏற்றுக்கொள்வதற்கான அழைப்பும் அவருக்கு விடுக்கப்பட்டிருந்தது.
-
‘அமெரிக்கா துவங்கும் எந்தவொரு போருக்கும் வட-கொரியா தயார்’
பியோங்யாங்: அமெரிக்கா துவங்குகின்ற எந்தவொரு போருக்கு எதிராகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வல்லமை வட-கொரியாவுக்கு இருப்பதாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். ஆளும் பாட்டாளிகள் கட்சியின் 70-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் பியோங்யாங்-இல் நடைபெற்ற பெரும் கொண்டாட்டங்களின் போது நடந்துள்ள, அவரது அரிதான உரையொன்றிலேயே கிம் ஜோங்- உன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
அட்டகாசம் செய்துவந்த 4 தொன் காட்டு யானை பிடிபட்டது!
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துவந்த யானையை போரதீவுப்பற்று வேத்துச்சேனை கம்பி ஆறு பிரதேசத்தில் வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று (10) சனிக்கிழமை காலை பிடித்துள்ளனர்.
-
மௌலவி அப்துர் றஊபின் மாணவர் Aj நுஃமான் நேற்று NTJ யின் மேடையில் ஏறினார். அல்ஹம்துலில்லாஹ்!
காத்தான்குடி: மௌலவி அப்துர் றஊபிடம் ஏழு வருடங்கள் கல்வி பயின்ற AJ நுஃமான் என்பவர் (கறுப்பு ஷேர்ட் அணிந்தவர்) மௌலவி அப்துர் றஊபிற்கெதிராக நாம் வெளியிட்ட DVD களால் கவரப்பட்டு தூய தௌஹீதை ஏற்றார். அல்ஹம்துலில்லாஹ்!
-
கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நாளை 11 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையில் காலை 8.00 மணி தொடக்கம்
-
மதிப்பிற்குரிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஓர் திறந்த மடல்
அப்துல் முனாப் பஹ்மியா, தாருஸ்ஸலாம் வீதி, காத்தான்குடி-6 கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம், தேசியத் தலைவர், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , தாருஸ்ஸலாம் கொழும்பு. மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு!
-
உலக அஞ்சல் தினம் காத்தான்குடி தபால் நிலையத்தில் அனுஷ்டிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஓக்டோபர் மாதம் 9ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக காத்தான்குடி தபால் நிலையம் ஏற்பாடு செய்த உலக அஞ்சல் தின நிகழ்வு காத்தான்குடி தபாலகத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது.
-
தாருல் அதர் அத்தவிய்யாவிற்கு ஓர் திறந்த மடல்
AM.பர்சாத், C13/4, தக்வா வீதி, புதிய காத்தான்குடி-03. 08.10.2015 தலைவர்/ செயலாளர், தாருல் அதர் அத்தவிய்யா, கப்பல் ஆலிம் வீதி, காத்தான்குடி-02. அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.,) உங்களுக்கு ஒரு திறந்த மடல்
-
பிரபல கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் காலமானார்
கொழும்பு: பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரை உருவாக்கிய பிரபல பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் (80) காலமானார். பந்துல வர்ணபுர, சிதத் வெத்தமுனி, அர்ஜுன ரணதுங்க, பிரண்டன் குருப்பு, போன்ற வீரர்கள் முதல் மஹேல ஜயவர்தன, ரஸல் ஆனோல்ட், திலான் சமரவீர, குமார் தர்மசேன, நவீட் நவாஸ், நிரோஷன் பண்டாரதிலக, ஜெஹான் முபாரக், ஹேமந்த பொடேஜு போன்ற தற்போதுள்ள இளம் வீரர்களை பயிற்றுவித்தவர் இவராவார்.