- சப்னி
இறக்காமம்: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கிடையில் புதிய நல்லாட்சிக்கான அரசு மிக நீண்ட காலமாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையிலுள்ள இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை அபிவிவருத்தி செய்ய வேணடுமென மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
சுமர் 18,000 மக்கள் வாழும் இறக்காம பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையில், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான பௌதீக வளங்கள், அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேற்றுப் பிரிவு, வைத்தியர் விடுதி என்பன இல்லாதிருப்பதுடன் சில நோய்களுக்கான மாத்திரைகள் வராந்தம் மற்றும் மாதாந்தம் நடைபெறும் கிளினிக் சேவைக்கான மாதத்திரைகளையும் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இதனால் இறக்காப்பிரதேசத்தில் திடீர் மரணங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டப்பணியாக இவ்வைத்தியசாலையின் தரம் உயர்தப்படுவதன் மூலமே இதன் உச்சப்பயனை மக்களுக்கு வழங்க முடியுமென வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.
எனவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கிடையில் மிக அவசரமாக குறிப்பிட்ட பணிகளை முன்னெடுக்குமாறு இறக்காமம் பிரதேச அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுப்பதுடன் தொடர்ந்தும் தட்டிக்கழிக்கும் பட்சத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துமென இறக்காமம் பிரதேச மக்கள் எச்சரித்துள்ளனர்.


Leave a comment