குவைத்: சவுதி அரேபியாவில் ஷியா உலமாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை அடுத்த பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானுக்கான தனது தூதுவரை குவைத் மீள அழைத்துள்ளது.சவுதி அரேபியா ஷியா உலமாவான நிம்ர் அல் நிம்ருக்கும் மேலும் 46 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து, கடந்த சனிக்கிழமை ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு, அதற்கு தீயும் வைக்கப்பட்டது.
பதிலடியாக ஈரானுடனான இராஜ்ஜிய உறவுகளை சவுதி அரேபியா துண்டித்துக்கொள்ள, பஹ்ரைன் மற்றும் சுடானும் அதனை பின்பற்றின.

Leave a comment