-
MJ
றியாத்: சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்குமிடையில் தற்பொழுது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையடுத்து, மக்காவிற்குள் நுழையும் ஈரானியர் சம்பந்தமான சந்தேகங்கள் சவுதியில் எழுந்திருந்தன. இந்நிலையில், |ஈரான் யாத்திரிகர்களை சவுதி தடைவிதிக்காது” என சவுதி அரேபிய வெளிநாட்டு அமைச்சர் ஆதில் அல் ஜூபைர் தெரிவித்துள்ளார்.
“இப்பதட்ட நிலைக்கும், இருநாட்டு முறுகலுக்கும் தெஹ்ரானே பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் ஆதில் அல் ஜூபைர், “ஈரானுக்கான ஆகாய வழி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை சவுதி நிறுத்திக்கொள்கிறது” எனவும் தெரிவிக்கிறார்.
“மக்காவுக்கும் மதீனாவுக்கும் யாத்திரிகர் விசா மூலமாக ஈரானியர்கள் சென்றுவருவதற்கு எவ்விதத் தடையும் அவர்களுக்கு விதிக்கப்படாது”| என தெரிவிக்கும் அல் ஜூபைர், “இருநாடுகளும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டுமானால், ஈரான் இருநாட்டு பரஸ்பர விடயங்களில் அதிக அக்கறை காட்டவேண்டும்” எனவும் தெரிவிக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 47 பேரில், நிமிர் அல் நிமிர் எனும் ஈரானிய மார்க்கப் பேரறிஞரும் ஒருவராவார். சியா எனும் காரணத்துக்காக அவரை சவுதி கொலை செய்ததாக ஈரான் தெரிவிக்கிறது. ஆனால், நிமிர் அல் நிமிர் பயங்கரவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததன் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி கூறுகிறது.
சவுதி விதிக்கும் ஒரு மரணதண்டனைக்கு மேற்கத்தய மனித உரிமைகள் அமைப்புக்கள் கிளர்ந்தெழும் இந்நேரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 47 பேரின் மரண தண்டனை விடயத்தில் மேற்கத்தய மனித உரிமைகள் அமைப்புக்கள் வாய் மூடி பாராமுகமாக இருக்கின்றன.
ஈரானுக்கும் சவுதிக்குமிடையில் ஓர் போரை ஏற்படுத்தி, ஈரானை வீழ்த்தி, முழு அரபு எண்ணெய் வலயத்தையும் தக்கவைத்துக்கொள்ளும் அமெரிக்காவின் 50 வருடகால கனவு தற்பொழுது நனவாகுமோ என அஞ்சத்தோன்றுகிறது.
ஈரானை எதிர்ப்பதற்கு சவுதியின் உதவி அமெரிக்காவுக்கு இன்றியமையாதவை.MJ
றியாத்: சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்குமிடையில் தற்பொழுது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையடுத்து, மக்காவிற்குள் நுழையும் ஈரானியர் சம்பந்தமான சந்தேகங்கள் சவுதியில் எழுந்திருந்தன. இந்நிலையில், |ஈரான் யாத்திரிகர்களை சவுதி தடைவிதிக்காது” என சவுதி அரேபிய வெளிநாட்டு அமைச்சர் ஆதில் அல் ஜூபைர் தெரிவித்துள்ளார்.
Leave a comment