றியாத்: ஷியா உலமா ஒருவரின் மரண தண்டனையை சவுதி அரசாங்கம் நிறைவேற்றியது தொடர்பில் ஈரானுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை அடுத்து, சவுதியை விட்டு ஈரானிய ராஜீய அதிகாரிகள் வெளியேறுவதற்கு சவுதி அரசாங்கம் நாற்பத்தெட்டு மணிநேரம் அவகாசம் கொடுத்துள்ளது.பயங்கரவாதம் தொடர்பிலான குற்றங்களுக்காக கடந்த சனிக்கிழமையன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாற்பத்தேழு பேரில் ஷேக் நிம்ர் அல் நிம்ரும் ஒருவர்.
தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தினுள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்ததையடுத்து ஈரானுடனான உறவுகளை சவுதி முறித்துக்கொண்டுள்ளது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை காரணங்காட்டி, ஏற்கனவே இருந்துவரும் பதற்றங்களை சவுதி அதிகரிக்கச் செய்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment