உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக முஸ்லிம்களின் பிரேரணைகளைத் தெரிவிக்கும்படி ஆய்வுக்கும் புள்ளிவிபரங்களுக்குமான நிலையம் வேண்டுகோள்

  • ஏ.கே.எம். சியாத்

muslims1[1]கொழும்பு: ஆய்வு மற்றும் புள்ளிவிபரங்களுக்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் உள்ள10ராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணய பிரேரணைகளின் பிரகாரம்; 70% சத வீதமானவர்கள் வட்டாரங்கள் மற்றும் பல அங்கத்தவர் வட்டாரங்கள் அடிப்படையாகக் கொண்ட தொகுதிவாரி முறை மூலமும், மீதி 30% சத வீதமானவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறை மூலமும் தெரிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

சமூக பங்களிப்பு, முகாமைத்துவம், அபிவிருத்தி தொடர்பான பொருளாதாரத் தேவைப்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தினை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சனத்தொகைக்கேற்ப இனரீதியான சிறிய சபைகள் மற்றும் வட்டாரங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கம் தேசிய எல்லை நிர்ணய சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், புதிய திருத்தங்களின் படி வினைத்திறன் மிக்க உள்ள10ராட்சி முறைமை முலம் மக்களுக்கு நல்லாட்சியினை ஏற்படுத்தல் போன்றவற்றினை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஒரு மாவட்டத்தில் உள்ள10ராட்சி மன்றங்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுதல் வேண்டுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்பாகும்.

பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் என்பனவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய எல்லை மீள்நிர்ணயம் தெடர்பில் முஸ்லிம்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

எனவே முஸ்லிம்களது சனச்செறிவுக்கேற்ப இன விகிதாசாரப்படி பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் முஸ்லிம் அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதில் பிரச்சினைகள் இருப்பின் மேற்படி ஆய்வுக்கும் புள்ளிவிபரங்களுக்குமான நிலையத்துக்கு அல்லது எம்.ஐ.எம். முஹியத்தீன் 0777733157 மற்றும் ஏ.கே.எம். சியாத் 07778931718 ஆகியோருக்கு உடனடியாக அறியத்தருமாறு வேண்டிக்கொள்ளப்படுவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Center for Research and Statistics (CRS),

No : 27, Vauxhall Street, Colombo 02

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s