Author: yourkattankudy.com
-
ஆப்கானில் பொதுமக்கள் 17 பேர் கோரப் படுகொலை
ஹெல்மண்ட் பிராந்தியத்தின் மூஸா கலா மாவட்டத்தில் சாலையோரத்திலிருந்து 2 பெண்களும் 15 ஆண்களுமாக 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இச்சடலங்கள் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்டோ அல்லது குரல்வளை அறுக்கப்பட்டோ கிடந்தன. சில சடலங்களில் கடுமையாக தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும், துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்களும் இருந்தன. இப்பகுதி தாலிபான்களின் பிடியில் உள்ள இடம் என்பதால் இச்சம்பவம் பற்றிய தகவல்கள் மந்தமாகத்தான் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
-
சிரியாவில் இடம்பெற்றுவரும் உக்கிர மோதல்கள்
-MJ சிரியாவில் அரசாங்க படைகளுக்கும் அந்நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் இடம்பெற்றுவரும் உக்கிரமான மோதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சடலங்களாக வீழ்ந்துகிடக்கின்றனர். இதே வேளை இன்று காலை சிரியாவின் அரசாங்கப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றை சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி இப்போராட்டத்தில் தாங்கள் வெற்றியை நோக்கி பயணிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
-
தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடை பெறவுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றோர் நேர காலத்துடன் தமது அலுவலகங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மூன்று மாகாண சபைகளுக்குமுரிய ஏழு மாவட்டங்களிலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கென ஒரு இலட்சத்து 789 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
-
நீல் ஆம்ஸ்ட்ரோங் மரணம்!
-MJ நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) யைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். 1930ம் ஆண்டு ஒஹியோ, அமெரிக்காவில் பிறந்தவர். 1950ல் கொரியாவுக்கு எதிரான யுத்தத்தில் ஓர் கடற்படை வீரராக இணைந்தார். 1962ல் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுப் பிரிவில் இணைந்தார். 20, ஜூலை 1969ல் உலகின் பார்வையை தன்பக்கம் ஈர்த்து, உலக வரலாற்றில் சந்திரனில் முதலில் கால் பதித்து சாதனை படைத்தார்.
-
அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யக்கோரி ரவூப் ஹக்கீம் இற்கும் அழுத்தம்
-SHM கிழக்குமாகாணசபைக்கான தேர்தல் களம் கிழக்கில் உச்சகட்டத்தில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில், அரசாங்கத்துடன் இணைந்திருந்து அமைச்சுப் பதவியையும், சுகங்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டு, அதே அரசாங்கத்தை தூற்றுவது இஸ்லாத்துக்கு முரணான விடயமும், மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்ட செயல் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் இன் உயர்பீட உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
-
அனுபவிப்பதோ அரச வளம் தூற்றுவது அதே அரசை: மனச்சாட்சிக்கு விரோதம் என்பதால் இராஜினாமா
முஸ்லிம் காங்கிரஸிள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து திடீரென இராஜினாமாச் செய்துள்ளதையடுத்து அந்தக் கட்சிக்குள் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரச வளங்களை அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தை தூற்றித்திரிவது மனச்சாட்சிக்கு விரோதமானதென்ற காரணத்தினாலும் மு.காவின் முழு நேர ஊழியனாக செயற்படும் எண்ணத்திலுமே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித் துள்ளார். இந்த இராஜினாமாவுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஏறாவூர் புன்னைக் குடாவில் அவர் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கூட்டத்தில் கட்சியின் போக்கு, தனது நிலைப்பாடுகளை எடுத்து…
-
ஆயர் ராயப்பு நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு! ரிசாத் பதியுதீன் மன்னார் ஆயருக்கு சவால்
மன்னார் ஆயர் மரியாதைக்குரிய ராயப்பு ஜோசப் அவர்கள் நான் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கியுள்ளேன் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான அப்பட்டமான பொய். 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமனங்களையும் நான் புதிதாக வழங்கவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
இலங்கை அணி வீரர்களை ஊக்குவிக்க ஜனாதிபதி கையெழுத்து
விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான பிரச்சார நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘விசிவர ஜயநத’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சார நிகழ்வுக்காக 10 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட 20 விக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
-
பத்தொன்பது வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று
-MJ அவுஸ்திரேலியாவில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பத்தொன்பது வயதிற்குட்பட்ட வீர்கள் பங்குபற்றும் ஆண்களுக்கான சர்வதேச 50 ஓவர்கள் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் (U19 ICC Cricket World Cup – 2012) இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேயாவும் இந்தியாவும் தெரிவாகி இருக்கின்றன.
-
அமெரிக்க தாக்குதலில் பதுருதீன் ஹக்கானி இறந்ததாக சந்தேகம்!
-BBC பாகிஸ்தானில் ஹக்கானி வலையமைப்பு என்ற ஆயுதக் குழுவின் முன்னணித் தலைவர் ஒருவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் பழங்குடியினப் பகுதியில் நடத்திய தாக்குதலில் இறந்துவிட்டதாக உறவுக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பதுருதீன் ஹக்கானி கொல்லப்பட்டார் என்ற கூற்றை ஹக்கானி வலயமைப்பு சார்பாகப் பேசவல்லவர் மறுத்துள்ளார்.
-
காத்தான்குடியில் நேற்று முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம்
காத்தான்குடி 1ஆம் குறிச்சி தீர்வை சந்தியில் இயங்கி வருகின்ற உணவகம் ஒன்று நேற்று மாலை சேதமாக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் இணைந்துள்ள ஹிஸ்புல்லாஹ்-அப்துர் ரஊப் மௌலவி கூட்டணி: ஓர் ஆய்வு
-MMS தனக்கென்று ஓர் புகழுடன் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக காத்தான்குடியில் அசைக்க முடியாத இருப்பிடத்தைத் வைத்து மார்க்கத்திலும், அரசியிலிலும் செல்வாக்குச் செலுத்திவரும் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள், இம்முறை இடம்பெற இருக்கும் கிழக்குமாகாணசபைத் தேர்தலிலும் வழமை போல தமது ஆதரவினை பேரம் பேசுதலின் பின்னர் பொ.ஐ.முன்னணிக்கு வழங்கி இருக்கின்றார். இது இவரது தனிப்பட்ட விருப்பமல்லாவிட்டாலும், ஊரின் அரசியலில் பிரதான கதாநாயகனாக இருக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வற்புறுத்தல் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பலவந்தத்தால் தனது சுயமரியாதையை…