இலங்கை அணி வீரர்களை ஊக்குவிக்க ஜனாதிபதி கையெழுத்து

விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான பிரச்சார நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘விசிவர ஜயநத’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சார நிகழ்வுக்காக 10 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட 20 விக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவற்றை நாடு முழுவதும் கொண்டு சென்று அவற்றில் கையெழுத்துக்களைப் பெற்று இலங்கை அணி வீரர்களை ஊக்குவிப்பதே இந்த பிரச்சார நடவடிக்கையின் நோக்கமாகும்.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கையெழுத்தினை மேற்படி விக்கெட்டில் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ் நிறுவனத்தின் நிரைவேற்றப் பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க உட்ப துரைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

 

Published by

Leave a comment