காத்தான்குடி 1ஆம் குறிச்சி தீர்வை சந்தியில் இயங்கி வருகின்ற உணவகம் ஒன்று நேற்று மாலை சேதமாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலரே இதைச் செய்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளரான முஹம்மது சமான் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் தலையில் காயமுற்ற நிலையில் கடை உரிமையாளர் சமான் மட்டு-ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் பொலிஸாரைப் பணித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-Virakesari
![1servv[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/1servv1.jpg?w=300&h=169)
![2dgdfsd[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/2dgdfsd1.jpg?w=300&h=169)
Leave a comment